Thursday, December 06, 2007

இன்னிசை பாடும் குருவிகள்.



இக்குருவியின் இன்னிசைக் குரலிங்கே:

நம்மோட பூமியின் இயற்கையே இனிமையானது. ஐம்புலனுக்கும் தெவிட்டாத இனிய உணர்வுகளைத் தரவல்லது. அதற்கேற்ப பல்வேறு உயிரினங்களையும் இயற்கை எழில்களையும் தன்னக்கத்தே நம்ம பூமி கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

ஆனால் மனிதனின் அறிவுமுத்திய தான்தோன்றித்தனமான செயலால் அழகிய நம்ம பூமியும் சீரழ்ஞ்சிட்டே போகுது. அதனுடைய அழகும் சீரழிஞ்சிட்டே வருகுது. இருந்தாலும் பூமியின் அழகை காதலிக்கின்றவங்க இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.



இப்ப விடயத்துக்கு வாறன்.. மடகஸ்கார் என்ற தேசம் மனித இடைஞ்சல் இல்லாமல் இருந்த தேசம். அதுவும் இப்ப மனிதரால இடைஞ்சலாகிட்டு வருகுது. இருந்தாலும் அங்கு இன்னும் பல இன உயிரினங்களும் இயற்கையும் உறவாடி மகிழ்வோடு வாழ்ந்து வருகின்றன.



அப்படி அங்கு வாழ்ந்து வரும் சுமார் 127 பறவை இனங்களின் இன்னிசைக் குரல்களை ஒலிப்பதிவாக்கி உள்ளார்கள். அவற்றில் சில மனிதரின் செயற்பாட்டால் அகதிகளாகி அழிவைச் சந்தித்து நிற்கின்ற இனங்களில் அடங்குகின்றன.

கேட்க என்ன ஒரு இனிமை. எந்த செயற்கையான இசைக்கும் இல்லாத மகிமை அவற்றின் குரலில் ஒலிக்கிறது.



நீங்களும் கேட்டு மகிழுங்கள் இந்த இணைப்பை அழுத்தி.

வேறு பல குருவிகளின் இன்னிசைக்கு இவ்விணைப்பை அணுகவும்.

தமிழில்: யாழ் இணையம்.

பதிந்தது <-குருவிகள்-> at 8:34 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க