Friday, December 07, 2007

நிஜக் கரப்பான் பூச்சிகளை ஏமாற்றிய இயந்திர கரப்பான்



இயந்திரக் கரப்பானைக் கண்டு ஏமாறும் நிஜக் கரப்பான்கள்

தொல்லை கொடுக்கும் கரப்பான் பூச்சிகளை ஏமாற்ற விஞ்ஞானிகள் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஒரு கரப்பான் ரோபோவைச் செய்து அதனைக் கொண்டு உண்மையான கரப்பான்களை ஏமாற்ற வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தின் பிரஸல்ஸில் உள்ள ஃப்ரீ பல்கலைக்கழகத்தின் ஜோஸ் கலோய் என்பவரே இந்த தானாக இயங்கக்கூடிய இந்த ரோபோ கரப்பான் பூச்சியை வடிவமைத்தவராவார்.

உண்மையான கரப்பான்களின் மணம் குணத்தை ஒரு பில்டர் பேப்பரில் பூசி அதனை இந்த ரோபோ கரப்பான் பூச்சியில் பொருத்தினார்கள் விஞ்ஞானிகள். பின்னர் உண்மையான கரப்பான்கள் வாழும் ஒரு இடத்தில் இந்த ரோபோ விடப்பட்டது.

இந்த ரோபோ கரப்பானை உண்மையான கரப்பான்கள் ஏற்கின்றனவா, அதன் மூலம் கரப்பான்களின் கூட்டாக முடிவெடுக்கும் திறனில் தம்மால் செல்வாக்குச் செலுத்த முடிகிறதா என்றெல்லாம் விஞ்ஞானிகள் அறிய முயன்றனர்.

ஆம், அவர்களால் கரப்பான் பூச்சிகளை ஏமாற்ற முடிந்தது. போலி ரோபோ கரப்பானை உண்மையான கரப்பான் என்று நம்பி தம் கூட்டத்தில் கரப்பான்கள் சேர்த்துக்கொண்டன.

bbc/tamil

பதிந்தது <-குருவிகள்-> at 8:58 pm

1 மறுமொழிகள்:

Blogger ரசிகன் விளம்பியவை...

ஹா..ஹா.. விசித்திரமாயிருக்கு...

Fri Dec 07, 11:10:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க