Sunday, August 10, 2003

மனிதனின் நடவடிக்கையால் உருவான உலக வெப்பமுறுதல் பிரச்சனை தற்போது ஐரோப்பாவை வெப்ப அலைத்தாக்கத்தின் மூலம் கலக்கிக் கொண்டிருக்கிறது....இவ் தீடீர் வெப்ப உயர்ச்சி காரணமாக பல இடை வெப்ப வலய, நனி குளிர் வலய உயிரினங்கள் தங்களைக் காப்பாற்ற வழியின்றி இறக்கும் நிலையை எட்டியுள்ளன...! பல ஆயிரம் மீன்களும் கடற்சிங்கங்களும் பறவைகளும் இதர உயிரினங்களும் புதிய,அதிகரித்த சூழல் வெப்பத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாது இறக்கின்றன என தினந்தோறும் செய்திகள் வந்தபடியுள்ளன....! அது மட்டுமன்றி காட்டுத்தீ மூலம் பல அரிய வகை தாவர இனங்களும் சூழல் தொகுதிகளும் அழியத்தொடங்கியுள்ளமை....பலத்த சூழல் தாக்கத்தை ஐரோப்பாவில் உண்டு பண்ண வாய்ப்பை ஏற்படுத்தும் என்பது திண்ணம்...! மனிதன் தனது செயலால் தானும் அழிந்து உலக உயிரியல் பன்மையையும் அழிக்கப்போகின்றான் என்பதன் அறிகுறியோ இது என எண்ணத்தான் தோன்றுகிறது...எதிர்கால மனித சந்ததிக்கு வாழ்விடம் செவ்வாயில் அமைத்துக் கொடுப்பானோ மனிதன்.....??????!!!!!!!!!

பதிந்தது <-குருவிகள்-> at 12:25 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க