Tuesday, April 27, 2004

Copycat....copy cat...Cc

அமெரிக்க நிறுவனம் ஒன்று குளோனிங் மூலம் செல்லப் பிராணிகளை மீள் உற்பத்தி செய்து கொடுக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்துச் செயற்படுத்தத் தொடங்கியுள்ளது...இது அமெரிக்காவில் பூனை நாய் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் பலர் தங்கள் பிரியமான பூனைகள் போன்று சில பிரதிப் பூனைகளை குளோனிங் மூலம் பிறப்பாக்கிக் கொள்ள குறிப்பிட்ட நிறுவனத்தை நாடவும் தொடங்கியுள்ளனர்....! இதனால் இந்நிறுவனத்திற்கு கூடிய அளவு வருமானமும் கிடைக்கத் தொடங்கியுள்ளது...அந்த வகையில் மிகச் சமீபத்தில் ஒரு பூனைப் பிரதியை இவர்கள் உறுவாக்கி உள்ளனர்....! அது மட்டுமன்றின் எதிர்காலத்தில் குறிப்பிட்ட நபரின் பூனையைக் குளோன் செய்ய வேண்டுமாயின் அதன் உடலில் இருந்து பெறப்பட்ட கலங்களைப் பாதுகாத்து வைக்கும் வசதியையும் இந்நிறுவனம் செய்து கொடுக்கவுள்ளதாம்....! இப்படி எந்தப் பிராணியினதும் கலங்களைப் பாதுகாத்து வைத்துப் பின் தேவையான போது மீண்டும் அவற்றில் இருந்து பிரதிகளை உருவாக்க முடியும்.....!அது மட்டுமன்றி குறிப்பிட்ட பிராணியின் பரம்பரை அலகைக் ( DNA) கூட பாதுகாத்து வைத்து அவற்றின் பிரதான விருப்பத்துக்குரிய இயல்புகளைக் வெளிப்படுத்தக் கூடிய பிரதிகளைப் பின்னர் உற்பத்தி செய்து கொள்ளவும் அந்நிறுவனம் வசதி செய்து கொடுக்கிறதாம்...!

இதற்கிடையில் குறிப்பிட்ட நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பிரதிப் பிராணிகள் தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி இல்லை எனில் குறிப்பிட்ட நிறுவனத்தினர் வாடிக்கையாளர்கள் செலவு செய்த பணத்தை மீண்டும் திருப்பிச் செலுத்தும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளனராம்...!

மனிதக் குளோனிங் போல அன்றி விலங்குகளைக் குளோனிங் செய்வது அமெரிக்காவில் தடையில் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது....அது மட்டுமன்றி செல்லப் பிராணி வளர்ப்போர் தங்களின் செல்லப் பிராணிகளை இழந்துவிட்டால் அவற்றைப் போன்று இன்னொன்றைப் மீண்டும் பெற முடியாமல் இருப்பதை இட்டு வருத்தம் அடைவர்...ஆனால் எனி அந்தக் கவலை தேவையில்லை என்று சொல்கிறது இந்த நிறுவனம்....!

மேலதிக தகவல் இங்கே..

பதிந்தது <-குருவிகள்-> at 7:21 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க