Monday, April 25, 2005

செவ்வாயிலும் தூசிப் பேய்கள்



பேய்கள் செவ்வாய்க் கிரகத்தையும் விட்டு வைக்கவில்லைப் போலும்....செவ்வாயின் மேற்பரப்புச் சார்ந்து சுழற்காற்றுக் கொண்டெழுந்த தூசிப் பேய் ஒன்றை கடந்த ஆண்டு செவ்வாயில் தரையிறங்கி அக்கோள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுப் படங்கள் பிடித்த ஸ்பிரிட் ரோவர் படம் பிடித்துள்ளது...!

ரோவர் எடுத்த பல படங்களோடு படங்களாக இந்தச் தூசிப்பேயும் கிளிக் செய்யப்பட்டிருப்பதை ஸ்பிரிட் எடுத்த படங்களை மேலும் ஆய்வு செய்தபோது அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்...! இது சூரிய வெப்பத்தால் செவ்வாயின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தில் ஏற்படும் பெளதீக மாற்றங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது...இப்படியான மாற்றங்கள் பூமியில் சகஜம்..! பூமியில் நிகழும் tornadoes மற்றும் waterspouts க்கு ஒப்பானதே இந்த செவ்வாய்த் தூசிப் பேயும்...!

One of the US space agency's robot rovers on the Red Planet has captured whirlwinds, or "dust devils", churning their way across the Martian plain - bbc.com

மேலதிகள் தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 12:59 pm

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

தகவலுக்கு நன்றி குருவி.
அப்போ செவ்வாய் கிரகத்துக்கு மனிதன் குடியேற
போகும் போது கையோடு ஒரு கூவர் (hoover) கொண்டு போகவேண்டியது தான். :-)

Vasi

Mon Apr 25, 11:08:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க