Sunday, July 31, 2005

செவ்வாயில் பனிக்கட்டிக் குளம்..!



செவ்வாய் மீது விண்பொருள் ஒன்று மோதி அமைந்த குழியில் பனிக்கட்டிக் குளம்..!

ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்குச் சொந்தமானதும், செவ்வாய் கிரகத்தை அண்மித்து சுற்றி அதனை ஆய்வு செய்து வரும் விண்கலம் ஒன்று, செவ்வாயின் வட அரைக்கோளத்தில் வடமுனைவு நோக்கிய தூரப் பகுதி ஒன்றில் பனிக்கட்டிக் குளம் ஒன்றை படம் பிடித்துள்ளது...!

இந்தப் பனிக்கட்டிக்குளம் விண்பொருள் ஒன்று செவ்வாயின் வட அரைக்கோளத்தில் மோதிய இடத்தில் அமைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன..!

செவ்வாயில் பனிக்கட்டி நிலையில் நீர் அவதானிக்கப்பட்டிருப்பதானது அங்கு ஏதோ ஒரு வடிவத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் அல்லது வாழலாம் என்ற சாத்தியக்கூற்றை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது...!

அவதானிக்கப்பட்டது பனிக்கட்டி அல்லாத வேறுபடிவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை விஞ்ஞானிகள் நிராகரித்துள்ளனர்..!

மேலும் தகவல்கள் இங்கு...!

பதிந்தது <-குருவிகள்-> at 1:14 pm | மறுமொழிகள் | Back to Main

Wednesday, July 27, 2005

டிஸ்கவரியை ஏவிய போது ஏற்பட்ட பாதிப்புக்களால் பீதி..!



டிஸ்க்கவரி விண் ஓடம் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டபோது அந்த ஓடத்தின் கீழ்பகுதியில் இருக்கும் வெப்பத் தடுப்பு ஓடு சிறிய அளவில் உடைந்து வீழ்ந்துள்ளது தொடர்பிலும், வெளிப்புற எரிபொருள் தாங்கியிலிருந்து கறுப்பு நிறப் பொருளொன்று வீழ்ந்தது தொடர்பிலும் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலம்பியா விண் ஓடம் விண்ணில் வெடித்துச் சிதறியதை அடுத்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக விண் ஓடங்களை விண்ணில் செலுத்துவதை இடைநிறுத்தியிருந்த நாசா விண்ணாய்வுக் கழகம் நேற்று டிஸ்க்கவரி விண் ஓடத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

டிஸ்க்கவரி ஓடம் விண்ணில் செலுத்தப்பட்ட போது அதில் பொருத்தப்பட்டிருந்த ஒளிப்படக் கருவி ஓடத்தின் கீழ் பகுதியிலிருந்து சிறிய துண்டுகள் உடைந்து வீழ்வதை படம் பிடித்தது. இந்த வீடியோ ஒளிப்படத்தை நுணுக்கமாக ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஓடத்தின் கீழ்பகுதியில் உள்ள வெப்பத் தடுப்பு ஒடு சிறிய அளவில் உடைந்து வீழ்ந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். சுமார் ஓன்றரை அங்குல அளவிற்கு வெப்பத் தடுப்பு ஓடு உடைந்து வீழ்ந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று விண் ஓடத்தின் வெளிப்புற எரிபொருள் தாங்கியிலிருந்து கறுப்பு நிற பொருள் ஒன்று வீழ்வதை தரையிலிருந்த சில ஊடகவியலாளர்கள் படம் பிடித்துள்ளனர்.

இந்த இரு சம்பவங்களாலும் விண் ஓடத்திற்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்படுமா என்பது தொடர்பில் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருவகின்றனர்.

நன்றி - சங்கதி.கொம்

மேலதிக விபரங்கள் இங்கு - ஆங்கிலம்

பதிந்தது <-குருவிகள்-> at 8:19 am | மறுமொழிகள் | Back to Main

Tuesday, July 26, 2005

டிஸ்கவரி விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது..!



இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக கொலம்பியா விண்கலம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அமெரிக்காவால் ஏவப்படும் முதலாவது விண்கலமான டிஸ்கவரி, இன்று புளோரிடாவின் கேப் கனவரல் என்னும் இடத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.

டிஸ்கவரி விண்ணில் எழுந்து சென்ற போது அதனைப் பல விண் ஆய்வாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்; நாசா விண்வெளி ஆய்வு கூடத்தின் இருந்து அதன் கட்டுப்பாட்டாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அந்த விண்கலத்தில் உள்ள 7 விஞ்ஞானிகளும் தற்போது அதனை விண் சுற்றுப்பாதையை நோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னர் திட்டமிட்டபடி சர்வதேச விண் ஆய்வு கூடத்துடன் இன்னும் இரு நாட்களில் அவர்கள் இணையவுள்ளனர்.

தொழில் நுட்பக் கோளாறு காரணமாக சுமார் இரு வாரங்கள் தாமதமான டிஸ்கவரி நிதானமாக ஏவப்பட்டது குறித்து அங்கு ஒரு ஆறுதல் காணப்பட்டதாக அங்குள்ள ஒரு பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.

BBC Tamil

பதிந்தது <-குருவிகள்-> at 10:19 pm | மறுமொழிகள் | Back to Main

Wednesday, July 20, 2005

சந்திரனில் மனிதனும் சந்திர மரங்களும்..!



தற்போதும் அமெரிக்காவில் உயிர் வாழும் சந்திர மரங்கள்...!


யூலைத் திங்கள் 20ம் நாள் 1969ம் ஆண்டு மனித வரலாற்றில் முக்கியமான விண்ணியல் சாதனை நிகழ்ந்த நாள்..! அன்றுதான் அமெரிக்க விண்வெளிவீரர்களான Neil A. Armstrong, Commander; Edwin E. Aldrin, Lunar Module Pilot; Michael Collins, Command Module Pilot, ஆகியோர் முதன்முதலில் சந்திரனில் கால்பதித்த நாள்...! அதுவரை அபூர்வமாக தெய்வமாக உவமையாக விளங்கிய சந்திரன் அன்றிருந்து தான் ஆராய்ச்சிக்குரியதானது...!

அதன் பின்னர் மேலும் 5 பயணங்கள் அப்பலோ விண்ணோடம் மூலம் சந்திரனுக்கு நடத்தப்பட்டுள்ளன...! அதில் அப்பலோ 14 என்ற விண்ணோடம் மூலம் பெப்ரவரித் திங்கள் 5ம் நாள் 1971ம் ஆண்டு சந்திரனை நோக்கிப் பயணித்த விண்வெளி வீரர்களில் ஒருவரான Stuart A. Roosa, Command Module Pilot, தனது பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட காலுறை அளவுப் பைக்குள் தனக்குப் பிடித்தமானதும் அமெரிக்க வனத்துறை மற்றும் தாவரப் பிறப்புரிமையியல் ஆய்வாளர்களின் பரிந்துரைக்கு உட்பட்டதுமான மரத்தின் விதைகளை எடுத்துச் சென்று அதைச் சந்திரனில் வெளிப்படுத்தி மீண்டும் பூமிக்கு கொண்டு வந்துள்ளார்...!

அந்த விதைகள் முளைத்து வந்த வழித்தோன்றல்கள்...மாற்றங்கள் ஏதும் இன்றி இன்றும் சந்திர மரங்களாக (Moon Trees) உலகின் பல பகுதிகளில் வாழ்கின்றன அத்துடன் அவை ஞாபகார்த்தமாக வளர்க்கப்பட்டும் வருகின்றன...!

இந்த சந்திர மரங்கள் பற்றி இன்றுதான் எமக்கு அறியக் கிடைத்தது...உங்களுக்கு எப்படி...??!




மர விதைகளை சந்திரனுக்கு எடுத்துச் சென்ற விண்வெளி வீரர் Stuart Roosa

மனிதன் சந்திரனில் கால் பதித்த இடங்கள் மற்றும் விபரங்கள் பற்றி பட விபரணத்துக்கு இங்கு அழுத்துங்கள்..!

சந்திர மரங்கள் பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கு அழுத்துங்கள்..!

பதிந்தது <-குருவிகள்-> at 9:29 am | மறுமொழிகள் | Back to Main

Thursday, July 14, 2005

டிஸ்கவரியின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது..!



13-07-2005 இல் ISS நோக்கி விண்ணுக்குச் செலுத்தப்பட இருந்த அமெரிக்க நாசா நிறுவன விண்ணோடமான டிஸ்கவரி, இறுதி நேரத்தில் அவதானிக்கப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணுக்குச் செலுத்தப்படுதல் மறு திகதி அறிவிக்கப்படாது ஒத்திவைக்கப்பட்டுள்ளது...!

விண்ணோடம் கெனடி ஏவுதளத்தில் விண்வெளி வீரர்களுடன் செலுத்துகைக்கு தயாராக இருந்த வேளை எரிபொருள் தாங்கியில் இருந்த உணரி (sensor) தொழிற்படத் தொடங்கி தொழில்நுட்பக் கோளாறை அடையாளம் காட்டவே செலுத்துகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.!

இதற்கு முன்னராக டிஸ்கவரியின் முன் கண்ணாடியில் பொருத்தப்பட்டிருந்த பிளாஸ்டிக் காப்பு கழன்று விழுந்து, அது சரி செய்யப்பட்டு முன்னர் குறிப்பிட்டது படி இன்று விண்ணோடம் செலுத்துகைக்கு தயார் செய்யப்பட்டிருந்தது...! எனினும் வரும் திங்கள் வாக்கில் டிஸ்கவரி விண்ணில் செலுத்தப்பட சந்தர்ப்பம் இருப்பதாகவும் கூறப்படுகிறது...!

நாசாவின் டிஸ்கவரி விண்ணோடம் மீண்டும் எதிர்வரும் செவ்வாய்கிழமை (26-07-2005) அன்று ஐ எஸ் எஸ் நோக்கி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது...!

Discovery given new launch date

The US space agency has set Tuesday (26-07-2005) at 1039 EDT (1539 BST) as its new launch opportunity for the shuttle Discovery


bbc.com

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 12:40 am | மறுமொழிகள் | Back to Main

Sunday, July 10, 2005

மீண்டும் விண் ஏகும் டிஸ்கவரி...!



கிட்டத்தட்ட 2 1/2 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அமெரிக்க கொலம்பிய விண்ணோட விபத்திற்குப் பின்னர் சர்வதேச விண் நிலையம் நோக்கி அமெரிக்க டிஸ்கவரி விண்ணோடம் மூலம் எதிர்வரும் புதன்கிழமை (13 - 07 - 2005) விண்ணுக்கு பயணிக்க இருக்கும் 7 பேர் கொண்ட விண்வெளிவீரர்கள் குலாத்தைப் படத்தில் காணலாம்...! இவர்களுக்கு Eileen Collins எனும் பெண் வீராங்கனை தலைமை தாங்குகிறார்...!

இவர்கள் சர்வதேச விண் நிலையத்தின் கட்டமைப்புத் தொடர்பான இறுதிப் பணிகளை நிறைவு செய்வதுடன்.... விண்வெளியில் மனிதர்களை அதிக காலம் தங்க வைக்கக் கூடிய சூழ்நிலைகள் குறித்தும் மீண்டும் சந்திரனுக்குப் போவது குறித்தும் ஆய்வுகள் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது...!



விண்ணோக்கிய பயணத்துக்காக காத்திருக்கும் டிஸ்கவரி (Discovery) விண்ணோடம்...!



Commander Eileen Collins
Pilot James Kelly
Mission Specialist Andy Thomas
MS Charles Camarda
MS Wendy Lawrence
MS Soichi Noguchi
MS Steve Robinson

டிஸ்கவரியில் பறப்புக்குத் தயாராக இருக்கும் விண்வெளி வீரர்களும் அவர்களின் விபரங்களும்..!

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 10:09 am | மறுமொழிகள் | Back to Main

Friday, July 08, 2005

காலநிலை மாற்றமும் ஜி - 8 நாடுகளின் மாநாடும்..!


சமீபத்திய ஜி - 8 நாடுகளின் உச்சிமாநாட்டில் அடுத்து முக்கிய விசயமாக காலநிலை மாற்றம் குறித்த விவகாரம் பேசப்பட்டுள்ளது.

அமெரிக்கா உட்பட செல்வந்த நாடுகளையும், சீனா, இந்தியா போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளையும் ஒன்றாக இணைக்கும் வகையில் ஜி.எட்டு நாடுகளுக்கும், ஏனைய நாடுகளுக்கும் இடையில் ஒரு புதிய பேச்சுவார்த்தைக்கான திட்டம் குறித்து டொனி பிளயர் அறிவித்துள்ளார்.

இது குறித்து பெருமைப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

புவி வெப்பமடைவதை தாமதப்படுத்தவும், அப்படியே அதற்கு ஒரு தடை போடவதையும் இலக்காகக் கொண்டே இந்த பேச்சுக்கள் அமையும் என்றும் பிளயர் குறிப்பிட்டார்.

அடுத்த நவம்பர் மாதத்தில் நடக்கவுள்ள ஒரு உச்சிமாநாட்டுடன் இது ஆரம்பமாகும்.

புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை குறைக்க புதிய இலக்குகளையோ அல்லது புதிய கால எல்லையையோ தாம் நிர்ணயிக்கவில்லை என்றும் பிளயர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கோரியது போல் அல்லாமல், காலநிலை மாற்றம் என்பது ஒரு அவசரப் பிரச்சனை அல்ல என்றும் அது ஒரு நீண்ட காலப் பிரச்சினை என்றும் இறுதியாக வெளியான தகவலறிக்கை கூறுகிறது.

தகவல் ஆதாரம் - பிபிசி.தமிழ்

பதிந்தது <-குருவிகள்-> at 11:52 pm | மறுமொழிகள் | Back to Main

Monday, July 04, 2005

வால்நட்சத்திரத்தின் மீதொரு மோதல்..!



மனிதன் மேற்கொண்ட விண்ணியல் மொத்துகையின் பின்னர் வால்நட்சத்திரத்தின் திண்மப் பகுதியில் இருந்து பனித்துகள்களும் தூசி மீதிகளும் வெளித்தள்ளப்படும் காட்சி...!

முன்னர் அறிவித்தது போல யூலை 4 ம் திகதிக்கு அண்மித்து.... நாசா அனுப்பிய விண்ணில் ஆள ஊடுருவி மோத விட்டு ஆய்வு செய்யும் விண்கலத்தின் மொத்துகைத் திணிவு (impactor), பூமிக்கு அப்பால் 133 மில்லியன் கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள Tempel 1 எனும் வால் நட்சத்திரத்தின் திண்மத் திணிவுப் பகுதியில், கிட்டத்தட்ட 37,000km/h எனும் சார்பு வேகத்தில் மோதி, வால்நட்சத்திரத்தின் திண்மம் பகுதியில் இருந்து பெருமளவு பனித்துகள்களையும் தூசி மீதிகளையும் கொண்ட கலவையை விண்ணில் வெளித்தள்ளி உள்ளதாக, இம்மொத்துகையை அவதானித்து வரும் ஆள ஊடுருவி ஆய்வு செய்யும் தாய் விண்கலம் அனுப்பிய படங்கள் உறுதி செய்வதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்...!

இந்த மொத்துக்கையின் விளைவுகளையும் மீதிகளையும் ஆய்வு செய்வதன் மூலம் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாகக் கருத்தப்படும் சூரியமண்டலத்தின் ஆரம்ப கால இரசாயனக் கட்டமைப்புக்கள் பற்றியும் பிரபஞ்சத்தின் தன்மைகள் பற்றியும் கண்டறிய வாய்ப்புக் கிடைப்பதுடன், பிரபஞ்சத்தில் எப்படி உயிரினங்கள் தோன்றின என்று தீர்மானிக்கக் கூடிய புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் இவ்வாய்வில் ஈடுபடும் விஞ்ஞானிகள், தமது திட்டத்தின் ஆரம்ப வெற்றியைக் கொண்டாடியபடி அறியத்தருகின்றனர்...!

இந்த மொத்துகை ஒரு 747 விமானம் மீது ஒரு நுளம்பு மோதுவதற்கு நிகரானதாக இருப்பினும்...அதன் விளைவுகளை அவதானிப்பதே முக்கிய நோக்கம் என்றும் தெரிவிக்கப்படுகிறது...!

இந்த சாதனைமிக்க செயற்கையான விண் மொத்துகைக்கு உள்ளாக்கப்பட்ட வால்நட்சத்திரத்தின் பருமன் சுமார் 14 கிலோமீற்றர்கள் வரை இருக்கும் என்று தெரிகிறது. இந்த மொத்துகையின் விளைவுகளை, ஆள ஊடுருவி மோத விட்டு ஆய்வு செய்யும் தாய் விண்கலம், வால்நட்சத்திரத்தில் இருந்து வெறும் 500 கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து தொடர்ந்து கமராக்கள் மற்றும் இதர உணரிகள் (sensors) கொண்டு ஆய்வு செய்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன...! மேலதிக படங்களும் விபரங்களும் கிடைக்கும் போது அவை இயலுமானவரை இங்கு தரப்படும்...!



மோதலுக்கு சில விநாடிகளுக்கு முன்னர்.. தாய் விண்கலம் அனுப்பிய மொத்துகைத் திணிவில் (impactor) இருந்த கமரா பிடித்தனுப்பிய வால்நட்சத்திரத்தின் மேற்பரப்புக் காட்சி...!



வெற்றிக் களிப்பில் நாசா விஞ்ஞானிகள்..!



மொத்துகை தொடர்பான விளக்கப்படம்

மேலதிக தகவல்களுக்கும் அனிமேசன் படங்களுக்கும் இங்கு அழுத்துக...!

பதிந்தது <-குருவிகள்-> at 10:43 am | மறுமொழிகள் | Back to Main