Friday, January 27, 2006

கடல்மட்டம் வேகமாக உயர்கிறது.



அண்டாட்டிக்கில் உருகும் பனிப்பாறைகள்..!

ம்.. இது கொஞ்சம் கவலைக்குரிய விடயம். நமது பூமியில் கடல் தான் அதிகம். உலக கடல்மட்டத்தின் அளவு 1870 க்கும் 2004 க்கு இடையில் சராசரியாக 19.5 சென்றி மீற்றர்கள் அதிகரித்துள்ளது என்று அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கடந்த 50 வருடங்களில் இது அதற்கு முன்னைய காலங்களை விடத் துரிதமாக நடந்துள்ளது. அதுமட்டுமன்றி இதே வேகத்தில் கடல்மட்டம் உயர்ந்தால் 1990 க்கும் 2100க்கு இடையில் கடல்மட்டம் சாரசரி 88 சென்ரிமீற்றர்களை எட்டியதாக அதிகரிக்கக் கூடும் என்றும் எதிர்வு கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் உலக வெப்பமுறுதல். அதற்கு முக்கிய காரணம் பச்சைவீட்டு வாயுக்களின் (Greenhouse gases) வெளியேற்றம். அதிலும் காபனீரொக்சைட் (Carbondioxide) வாயு வளிமண்டலத்தில் அதிக அளவில் தொழிற்சாலைகளால் கொட்டப்படுவதே முக்கியமான காரணியாக உள்ளது.

உலக வெப்பமுறுதலால் துருவ பனி உருகுதல் மற்றும் கடல் நீரின் வெப்ப விரிவு என்பனவே கடல்மட்டம் அதிகரிக்க அதிகம் பங்களிக்கின்றன..!

இப்படிக் கடல்மட்டம் அதிகரித்துச் சென்றால் பல தீவுக்கூட்டங்களும் தாழ்நிலைப் பிரதேசங்களும் கடலடிக்குள் சிக்கிக்கொள்ளும். பூகம்பம் ஒரு பக்கம் தரையை விழுங்க, மனித நடவடிக்கையாலும் தரை கடலால் விழுங்கப்படுவதால் தரைவால் உயிரினங்களுக்கு ( மனிதன் உள்ளடங்க) இடப்போட்டி அதிகரிக்கப் போகிறது. இது இயற்கையில் உயிரின பரம்பல் சமனிலையை மாற்றி அமைக்க வழிசெய்யும்..! இது மனிதரிலும் பலத்த செல்வாக்குச் செலுத்தலாம்.

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 8:57 am

3 மறுமொழிகள்:

Blogger மணியன் விளம்பியவை...

மிக நல்ல பதிவு. நேற்றுதான் "The day after to-morrow" என்ற படத்தைப் பார்த்து அதிர்ந்தேன். அதில் துருவப் பனி உருகலால் கடலடியில் செல்லும் வெப்பஓட்டம் பாதிக்கப்பட்டு, வட அமெரிக்காவின் பெரும்பகுதி பனிப்பொழிவால் பாதிக்கப் படுவதாய் வருகிறது.

விஞ்ஞானசெய்திகளை அழகுதமிழில் தரும் உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது.

Fri Jan 27, 01:46:00 pm GMT  
Anonymous Anonymous விளம்பியவை...

நல்லது, நிறைய மீன்கள் கிடைக்கும்.

Fri Jan 27, 07:36:00 pm GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

ம்..//மணியம்//..நாங்களும் அந்தப் படம் பார்த்தோம்..Ice age நோக்கிய மாற்றங்களோ தெரியவில்லை.

மனிதர்களின் செயற்பாடுகள் தான் அதிகம் சூழல் வெப்பமுறுதலுக்கு காரணமாகிவிட்டது..! குறிப்பாக அபிவிருத்தி அடைந்த நாடுகளும் இந்தியா சீனா போன்ற அபிரிவித்தி அடையத் துடிக்கும் நாடுகளும்.. சுற்றுச் சூழல்பாதுகாப்பில் அதிகம் கவனம் செலுத்துவது நல்லது.

நன்றி உங்கள் வருகைக்கும் பதிலுக்கும் மணியம். உங்கள் சில பதிவுகளும் நல்ல அறிவியல் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. தொடருங்கள்.

// அனோனிமஸ்//

மீன் நிறைய வரும் சாப்பிட நீங்கள் டான் இருக்க மாட்டீர்கள். இருக்க வளப் பெருக்கத்துக்கு இடமில்லாமல் மடிந்திடுவீர்கள்..!

Fri Jan 27, 08:24:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க