Monday, January 30, 2006

பூமி வெப்பமுறுதலை தடுக்க முடியாதாம்..!

புவி வெப்பமடையச் செய்யும் வாயுக்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பு இல்லை என்கிறது ஒரு அறிக்கை



புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை அவற்றின் ஆபத்தான மட்டத்துக்கு கீழே வைத்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று பிரிட்டன் அரசாங்கத்தின் அனுசரணையுடனான அறிக்கை ஒன்று கூறுகிறது.

பனிப் பிரதேசத்தில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகி, அதன் மூலம் உலகெங்கும் கடல்களின் நீர்மட்டம் உயரும் நிலையை நோக்கிய ஒரு பாதையில் உலகம் தற்போது மாட்டிக்கொண்டுள்ளது என்று பிரிட்டன் அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகளின் இந்த அறிக்கை கூறியுள்ளது.

பனிப் பாறைகளை உருகாமல் வைத்திருக்க கரியமில வாயுவின் (Carbondioxide) வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படுவது தற்போது மிகவும் அத்தியாவசியமாகிறது என்றும், ஆனால் அதன் மூலம் எரிசக்தி நிலையங்கள் மூடப்படும் நிலையே உருவாகும் என்பதால் அது அரசியல் ரீதியில் சாத்தியமல்ல என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தலைமை விஞ்ஞானியான டேவிட் கிங் தெரிவித்துள்ளார்.



மேலதிக தகவல் இங்கு

மேலதிக தகவல் இங்கு

தமிழில் தகவல் - பிபிசி.தமிழ்

பதிந்தது <-குருவிகள்-> at 5:53 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க