Tuesday, January 31, 2006

ஆபத்தை நோக்கும் வல்லூறுகள்



தெற்காசியாவில் அண்மைய ஆண்டுகளில் அருகிவரும் வல்லூறு இனத்தின் அழிவை தடுப்பதற்கு விஞ்ஞானிகள் ஒரு வழியை பரிந்துரைத்துள்ளனர்.

சுகயீனமுற்ற விலங்குகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு விவசாயிகள் வீக்கத்தை தணிக்கும் மருந்தான டைக்ளோபெனாக்கை பயன்படுத்துவதை தவிர்த்தால், இந்த வல்லூறு பறவை இனம் முற்றாக அழிந்து போவதில் இருந்து தவிர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த வல்லூறுகள் இறந்த விலங்குகளை உண்பதால், அந்த விலங்குகள் ஏற்கனவே இந்த மருந்தின் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டிருப்பின், அதனால் அந்த விலங்கின் இறைச்சி விசமடைந்து, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான வல்லூறுகள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சில ஆயிரம் வல்லூறுகள் மாத்திரமே தற்போது என்ஞ்சியுள்ளன.

இந்திய அரசாங்கம் இந்த டைக்ளோபெனாக் மருந்தை தடை செய்துவிட்டு அதற்கு மதிலாக உரிய மாற்று மருந்தை தேடிக்கொள்ள வேண்டும் என்று வன விலங்கு நிபுணர்கள் கோரியுள்ளனர்.

பிபிசி.தமிழ்

பதிந்தது <-குருவிகள்-> at 6:41 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க