Thursday, February 02, 2006

சூரியக் குடும்பத்தில் 10வது கோள்..?! - சில குறிப்புகள்.



நமது பூமி உள்ளடங்கும் சூரியக் குடும்பத்தின் முடிவு எல்லையில் - Kuiper Belt - பனிப்பட்டிப் பகுதியில், நெப்டியுன் கோளை கடந்த பகுதியில், சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கோளான புளூட்டோ உள்ளடங்கும் பகுதியில், பல பனித்திணிவுகள் மத்தியில், 2003 UB313 எனப் பெயரிடப்பட்ட புளூட்டோவை விடப் பெரிய விண் பொருளின் பருமனை விண்ணியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது கடந்த யூலையில், அமெரிக்க விண்ணியலாளர்களால் கண்டறியப்பட்டு Xena என்ற புனைப் பெயருடன் சூரியக் குடும்பத்தின் பத்தாவது கோளாக அமையலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. தற்போது ஜேர்மனிய விண்ணியலாளர்கள் பூமியில் நிலைநிறுத்தப்பட்ட சக்திமிக்க தொலைநோக்கிகள் கொண்டு இவ்விண் பொருளின் பருமனைக் கண்டறிந்துள்ளனர். அதன்படி அது சுமார் 3000 கிலோமீற்றர்கள் விட்டமுடையது என்றும் புளூட்டோவை விட 700 கிலோமீற்றர்கள் அளவில் விட்டத்தால் பருமன் கூடியது என்றும் அளவிட்டுக் கூறியுள்ளனர். ஏற்கனவே அமெரிக்க விண்ணியலாளர்களும் கபிள் விண்ணியல் தொலைநோக்கி கொண்டும் இதன் பருமனைக் கணித்திருந்தனர். மேலும் விபரங்களுக்கு கீழுள்ள இணைப்பை நோக்கவும்.



* First seen in 2003 but finally recognised in 2005
* Highly elongated orbit around Sun lasting 558 years
* Currently positioned some 14.5 billion km from Earth
* Has extremely frigid surface temperature of -250C
* May have thin atmosphere when closest to Sun
* Has moon with unofficial 'codename' of Gabrielle
* Names come from US TV series, Xena: Warrior Princess

ஸெனா (Xena) பற்றிய சில விபரங்கள்



சூரியக் குடும்ப கோள்கள் துணைக்கோள்களோடு Kuiper Belt பகுதியில் Xena உள்ளடங்க கண்டறியப்பட்ட இதர பனித்திணிவுகள் பற்றிய விபரங்கள்.

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 5:44 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க