Saturday, August 25, 2007

வான வெளியில் மாய ஓட்டை: விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர்



நமது சூரிய மண்டலத்தில் உள்ள பால்வீதியை அடுத்து பிரபஞ்சம் உள்ளது. அங்கு ஏராளமான சூரிய மண்டலங்கள் உள்ளன.

இவற்றில் 25-வது டிகிரி கோணத்தில் மாய ஓட்டை ஒன்று தெரிகிறது. அமெரிக்க மின்னோஸ்டோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் இதை கண்டு பிடித்து உள்ளனர்.

பூமியில் இருந்து லட்சக் கணக்கான ஒளி ஆண்டுகள் தூரத்தில் இது தென் படுகிறது. அது என்ன ஓட்டை? ஏதாவது பெரிய கோளில் உள்ள பள்ளமா என்று எந்த விவரமும் தெரியவில்லை.

மிக தூரத்தில் இருப்பதால் அது என்ன என்பதை கணிக்க முடியவில்லை என்று விஞ்ஞானி ருட்னிக் தெரிவித்தார்.

அமெரிக்க நாசா விண்வெளி மையத்தின் செயற்கை கோள் மூலம் இந்த ஓட்டை படம் பிடிக்கப்பட்டுள்ளது.

தமிழில் யாழ் இணையம் மற்றும் லங்காசிறி.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 10:49 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க