Friday, August 17, 2007

காக்கைக்கு புத்தி அதிகம் தானாம் - கண்டுபிடிப்பு (Video Attached)பாட்டி வடை சுட.. காக்கா கொத்திட்டுப் போய் மரத்தில் இருக்க... அதைப் பறிக்க குள்ள நரி திட்டம் போட.. நரியின் திட்டத்தை காக்கா வென்றதாகவும் கதை சொல்வார்கள்.

பானை ஒன்றின் அடியில் தண்ணீர் இருக்க.. தண்ணீர் தாகம் கண்ட காக்கா.. அதைக் குடிக்க குறுனிக் கற்களைப் பானைக்குள் போட்டு தண்ணீர் மட்டத்தை பானையில் கழுத்துவரை கொண்டு வந்து அதன் பின் தன்ணீரை அருந்தி தனது தாகத்தை தீர்த்ததாகவும் கதை சொல்வார்கள்.

இவையெல்லாம் கற்பனைகள்... கதைகள் என்றுதான் நாம் இருந்துவிடுகின்றோம். ஆனால் நியுசிலாந்து விஞ்ஞானிகளோ காக்கைகளின் அறிவைப் பரிசோதித்ததில் அவைக்கும் மனிதர்களைப் போல சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தீர்மானிக்கும் சிந்தனை உள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.

காக்கைக்கு உருசியான இறைச்சித் துருவல்களை அவைக்கு எட்ட முடியாத வகையில் ஒரு வலைப்பக்கப் பெட்டியில் போட்டனர். பெட்டியின் வெளியே சற்றுத் தூரத்தில் உணவை எட்ட முடியாத அளவுக்கு இருந்த சிறிய குச்சிகளையும் இன்னொரு பெட்டியில் உணவை எட்டக் கூடிய பெரிய குச்சிகளையும் இட்டனர்.

காக்காவை உணவு உண்ண அனுமதித்ததும்.. காக்கா.. சிறிய குச்சிசையைப் பயன்படுத்தி பெரிய குச்சி இருந்த பெட்டிக்குள் இருந்த குச்சியை.. சிறிய குச்சியால் தட்டித்தட்டி வெளியில் எடுத்து விட்டு.. அந்தப் பெரிய குச்சியை பயன்படுத்தி இறைச்சி இருந்த பெட்டிக்குள் இருந்து இறைச்சியை தட்டி எடுத்து உண்டுள்ளது.

இந்த முயற்சியில் பல தடவைகள் காக்கா வெற்றியும் பெற்றுள்ளது..!

இவ்வாய்வின் காணொளி இணைப்பு - வீடியோ

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 8:59 am

4 மறுமொழிகள்:

Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) விளம்பியவை...

http://johan-paris.blogspot.com/2007/07/blog-post_30.html
எனது இந்தப் பதிவிலுள்ள காட்சியையும் பாருங்கள்.
காகம் அதி புத்திசாலி ஐயமில்லை.

Fri Aug 17, 10:25:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

யோகன் உங்கள் இணைப்புக்கு நன்றிகள்.

ம்ம்.. பறவைகள் பொதுவா புத்திசாலிகள் தான்.

புறாவை தூதுவிட்டார்கள்.. அன்னத்தை தூதுவிட்டார்கள்.. எங்கள் தமிழ் இலக்கியங்கள் கூட பறவைகளைப் புத்திசாலி என்று காட்டி இருக்கின்றன தானே..!

நீதிக்கதைகள் பற்றி சில எதிர்விமர்சனங்கள் இருக்கின்றன. காக்கைக்கு அந்தளவு புத்தி இருக்குமா.. பிள்ளைகளுக்கு காக்கையை உதாரணம் காட்டுறது.. நரியைக் காட்டுறது.. சரியா தவறா என்றெல்லாம்.. பிரச்சனைப்பட்டார்கள்.

ஆனால்.. பல ஆங்கில சிறுவர் படங்களில் (eg:-Ice age) விலங்குகளையும் பறவைகளையும் கதாப்பாத்திரங்களாக்கி வருகின்றனர். அதன் மூலம் சிறுவர்களிடத்தில் பல சமூகச் செய்திகளை சொல்லியும் விடுகின்றனர்.

எம்மவர்கள் தான் சில இடங்களில் முரண்டு பிடிப்பதை நாகரிகமாக வளர்த்து வருகின்றனர். அவற்றிற்கு.. அதீத அறிவுரை வேறு அளிக்கின்றனர். சாதாரண விடயத்தைக் கூட.. தர்க்கித்து சீரழிக்கின்றனர்.

Fri Aug 17, 11:03:00 am BST  
Blogger ஜெஸிலா விளம்பியவை...

எனக்கு படம் தெரியவில்லையே ?

Fri Aug 17, 01:11:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

இரண்டாம் இணைப்பில் பிபிசி இணையத்தள செய்தியின் பிரதான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் சென்றும் இதே இணைப்பைப் பெறலாம். உங்களிடம் உள்ள வீடியோ பிளே பண்ணும் மென் பொருளைப் பொறுத்துதான் இதை காண முடியும். பொதுவாக விண்டோஸ் மிடியா மிளேயர் எல்லோரிடமும் இருக்கும். நீங்கள் அதைத் தெரிவு செய்து வீடியோவைக் காணலாம்.

உங்கள் வரவுக்கு நன்றிகள்.

Fri Aug 17, 01:35:00 pm BST  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<<முகப்புக்குச் செல்க