Monday, November 05, 2007

புவி வெப்பமடைவதை தடுப்பதற்காக தியாகம் செய்ய மக்கள் தயார் - பிபிசி



புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக தியாகம் செய்ய மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று பிபிசி உலக சேவையினால் நடத்தப்பட்ட சர்வதேச கருத்துக் கணிப்பு ஒன்று கூறுகிறது.

21 நாடுகளைச் சேர்ந்த 22,000 பேர் கலந்து கொண்ட இந்தக் கருத்துக்கணிப்பை பிபிசிக்காக நடத்தியவர்கள் குளோப்ஸ்கான் என்னும் நிறுவனத்தினர்.

காலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தை எதிர்கொள்வதற்காக, தாம் தனிப்பட்ட முறையில் தியாகங்களைச் செய்யத் தயாராக இருப்பதாக இந்த கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 80 வீதமானோர் கூறியிருக்கிறார்கள்.
இப்படிக் கூறியவர்களில் உலகில் புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை அதிகளவில் வெளியேற்றும் நாடுகளாகக் கூறப்படும் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் கணிசமாக அடங்குகிறார்கள்.

புதிய எரிபொருள் மூலங்களைக் கண்டறியவும், செயற்திறன் மிக்க எரிபொருள் பாவனையை ஊக்குவிக்கவும், சக்தி வரி ஒன்று விதிக்கப்படுவதை முக்கால்வாசிப் பேர் வரவேற்றிருக்கிறார்கள்.

bbc.tamil

பதிந்தது <-குருவிகள்-> at 11:51 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க