Tuesday, November 20, 2007

தோலில் இருந்து மூலவுயிர்க்கலங்கள் பிறப்பித்துச் சாதனை.



முளையம் வழி மூலவுயிர்க்கலங்களை உருவாக்கும் முறையும், தற்போதைய மரபணு தொழில்நுட்பம் சார்ந்து தோலில் உள்ள கலங்களைப் பயன்படுத்தி மூலவுயிர்க்கலங்களை உருவாக்கும் முறையும் படத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.

Therapeutic cloning produces stem cells which can develop into different types of body cell, making them ideal for research into treatment of disease.

But this technology involves the creation and destruction of embryos, which is ethically controversial. The stem cells created also run the risk of being rejected by the body.

The new technology, nuclear reprogramming, creates stem-like cells from the patient's own cells, avoiding both these problems.


முளைய நிலையில் காணப்படும் மூலவுயிர்க்கலங்களில் இருந்துதான் உடற்பாகங்களும் இழையங்களும் அவற்றின் பிரத்தியேக இயல்புகளுடன் தொழிற்படத்தக்க வகையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தற்போது வரை செயற்கை முறையில் உடற்கலக் கருவை முட்டைக்குள் செலுத்தி உருவாக்கப்பட்ட முளையத்தில் இருந்து பெறப்படும் மூலவுயிர்க்கலங்களைக் கொண்டே மூலவுயிர்க்கல அடிப்படை ஆய்வுகள் (stem cell basis research) செய்யப்பட்டு வந்தன.

ஆனால் மிகச் சமீபத்திய இரு ஆய்வுகளின் பிரகாரம் (ஜப்பான் மற்றும் அமெரிக்க ஆய்வாளர்களின் இரு வெவ்வேறு ஆய்வுகளின் பிரகாரம்) மரபணு தொழில்நுட்பத்துடன் இணைந்த வகையில் தோலில் உள்ள கலங்களை மூலவுயிர்க்கலங்களை பிறப்பிக்கும் வகையில் தூண்டி அவற்றில் இருந்து மூலவுயிர்க்கலங்களை உருவாக்கி இதயம் மற்றும் மூளை போன்ற உறுப்புக்களில் உள்ளது போன்ற கலங்களை உருவாக்கியுள்ளனர்.

இந்தச் சாதனை மிகு தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மனித முளையங்களை மூலவுயிர்க்கல ஆய்வுகளுக்கு என்று உருவாக்கி அழிப்பதைத் தடுத்து நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் மேற்குறிப்பிட்ட இரண்டு ஆய்வுகளிலும் மரபணு தொழில்நுட்ப அடிப்படையில், வைரஸ் கூறுகள் மூலம் ஜீன்கள் புகுத்தி மூலவுயிர்க்கலங்களை உருவாக்குதலைத் தூண்டுதல் என்பது பாவிக்கப்பட்டுள்ளதால் இத்தொழில்நுட்பங்களின் மூலம் பெறப்படும் மூலவுயிர்க்கலங்களிற்கான பாதுகாப்பு உத்தரவாதம் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே இவை தொடர்பான ஆய்வுகள் இன்னும் தொடரப்பட வேண்டியுள்ளன. அதுவரை முளையத்தில் இருந்து மூலவுயிர்க்கலங்களைப் பெற்று ஆய்வுகள் செய்வதே முதன்மை பெற்றிருக்கும் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை ஆகும்.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 9:00 pm

1 மறுமொழிகள்:

Blogger ரசிகன் விளம்பியவை...

பயனுள்ள செய்திகள்..நல்லாயிருக்குங்க...

Thu Nov 22, 02:05:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க