Wednesday, November 14, 2007

குரங்குகளின் கருக்கள் உயிர்ப்பிரதியாக்கம் செய்யப்பட்டு சாதனை



மனிதர்கள் மற்றும் அவர்களுடைய மிக நெருங்கிய உயிரினங்கள் உள்ளடங்கிய பாலூட்டிகள் வகையைச் சேர்ந்த குரங்கு இனங்களின் கருக்களை குளோனிங் எனப்படும் உயிர்ப்பிரதியாக்கத்தின் மூலம் உருவாக்கியுள்ளதை விஞ்ஞானிககள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவிலுள்ள ரஷிய ஆராய்ச்சியாளரான ஷௌக்ரத் மிடாலிப்போவ் வளர்ந்த மக்காவ் ரக குரங்கிலிருந்து எடுக்கப்பட்ட கரு உயிரணுக்களைக் கொண்டு ஒரு டஜன் கருக்களை உருவாக்கியுள்ளார்.

அவ்வாறு அவர்கள் உருவாக்கிய கருவிலிருந்த குருத்து உயிரணக்களிலிருந்து புதிதாக இதயம் மற்றும் மற்றும் நரம்பு உயிரணுக்களை அந்த ஆராய்ச்சிக் குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

இந்த முன்னேற்றத்தின் மூலம் மனித கருவை உயிர்ப்பிரதியாக்கம் செய்யவதை நோக்கிய ஒரு பயணத்தில் ஒரு பெரிய அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது என்று பிபிசியின் அறிவியல் செய்தியாளர் கூறுகிறார்.

bbc/tamil

பதிந்தது <-குருவிகள்-> at 11:19 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க