Tuesday, November 27, 2007

சந்திரனின் சுற்றுப்பாதையில் சீன விண்கலம் - படத்தை வெளியிட்டது சீனா.



ஜப்பான் சீனா இந்தியா என்று ஆசிய நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு சந்திரனை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. வழமை போல அமெரிக்கா தான் தான் எல்லாவற்றிற்கும் முதலாளி என்ற கணக்கில் இது தொடர்பிலும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

சரி அவை இருக்கட்டும்.. எனி விடயத்துக்கு வந்தால் அண்மையில் சீனா சந்திரனின் மிக நெருங்கிய சுற்றுப்பாதைக்கு அனுப்பிய சந்திரனுக்கான முதலாவது விண்கலமான Chang'e-1 சந்திரனின் தரைத்தோற்றத்தை தெளிவாகப் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது. அப்படங்களை சீனா உத்தியோக பூர்வமாக வெளியிட்டுள்ளது. சீனா வெளியிட்டுள்ள சந்திரனின் தரைத்தோற்றம் பற்றிய படத்தையே மேலே காண்கிறீர்கள்.

அண்மையில் ஜப்பானும் தான் சந்திரனை நெருங்கிய சுற்றுப்பாதைக்கு அனுப்பிய விண்கலத்தில் இருந்து பெறப்பட்ட படங்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் மற்றும் சீனாவின் சந்திரனப் பயணங்களின் மேலதிக விபரங்கள் இங்கு- காணொளி அடங்கலாக.

படம் bbc.com

பதிந்தது <-குருவிகள்-> at 8:05 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க