Saturday, December 01, 2007

உலக எயிட்ஸ் தினம் - 40 மில்லியன் மக்கள் எச் ஐ வியுடன்.



மார்கழி 1 ம் திகதி உலக எயிட்ஸ் தினமாக எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த என்று கொண்டாடப்படுகிறது.

உலகில் சுமார் 40 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோய்க்கான எச் ஐ வி வைரஸ் தொற்றுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் எதிர்கால உலகின் பொருளாதாரம், சந்ததி ஆகியவற்றைத் தீர்மானிக்கும் இள வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது.



உலகில் ஆபிரிக்க நாடுகளிலும் ஆசிய மற்றும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் எயிட்ஸ் அதிகம் கோலோஞ்சியுள்ளது. மத்திய கிழக்கு போன்ற இடங்களில் அதன் பரவல் குறைவாகவே அமைந்துள்ளது.

எயிட்ஸ் தொற்றுள்ளவர்களுடன் நடைபெறும் பாலியல் உறவுகள், அறிமுகமற்றவர்களுடன் எழுந்தமானமாக நிகழும் தவறான பாலியல் களவு நிலை உறவுகள் மற்றும் எயிட்ஸ் தொற்றுள்ளவரின் உடற்பாய் பொருள் (இரத்தம்) பரிமாற்றத்தின் மூலமாக எயிட்ஸுக்கான வைரஸ் பரவிவருகிறது.

எயிட்ஸ் தொற்றுள்ள ஒருவரின் அருகில் வசிப்பதாலோ சாதாரணமாகத் தொடுவதாலோ எயிட்ஸ் பரவுவதில்லை.
எயிட்ஸை உருவாக்கும் எச் ஐ வி வைரஸுக்கள் உடலுக்கு வெளியே அதிக நேரம் உயிர்வாழா என்பதால் மேற்படி தொற்றுக்களுக்கான வாய்ப்புக்கள் இல்லை..!

உலகில் இருந்து எயிட்ஸை அழிக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பினும் எயிட்ஸ் தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெறுவதே எயிட்ஸ் நோய் தொடர்ந்து பரவாமல் இருப்பதற்கு சிறந்த வழியாகும். எனவே நம்பிக்கைக்கூரியவர்களுடனான பாதுகாப்பான பாலியல் ஒழுக்கமுள்ள நடத்தைகளே இதில் அனைவருக்கும் அவசியமாகிறது..!

எயிட்ஸ் தொற்றுக் கண்டவர்கள் இரத்ததானம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 7:35 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க