Monday, June 16, 2008

செவ்வாயில் பனிக்கட்டி இருப்பது போன்ற தோற்றம் வெளிப்பட்டுள்ளது.

செவ்வாயின் தரைப்படை மாதிரி நுணுக்குக்காட்டி அவதானிப்பின் கீழ்.

அண்மையில் செவ்வாயில் தரையிறங்கி ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் பீனிக்ஸ் கலம் அனுப்பியுள்ள நுணுக்குக்காட்டியூடான அவதானிப்பு வகைப் படங்கள் மற்றும் இதர கமராக்களூடு பெறப்பட்ட படங்கள் என்று அது திரட்டி அனுப்பியுள்ள தரவுகளை அவதானித்ததில் இருந்து செவ்வாயின் துருவப் பகுதிகளில் தூசிப் படைகளின் கீழ் வெண்ணிற பனிப்படலம் படர்ந்திருப்பதற்கான அதிக சாத்தியம் வெளிப்பட்டுள்ளது. இருப்பினும் இது பனிப்படலம் தானா என்பது பரிசோதனைகள் வாயிலாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

பீனிக்ஸ் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள தன்னியக்க இயந்திரக் கையைக் கொண்டு செவ்வாயின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுகளைச் செய்து வருகிறது. அவ்வாறு அது மாதிரியைச் சேகரித்த இடம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட படத்தில் மாதிரியாக எடுக்கப்பட்ட செவ்வாயின் மண் படைக்குக் கீழ் வெண்ணிற படையொன்று அவதானிக்கப்பட்டுள்ளது. அது பனிப்படலமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

பீனிக்ஸ் செவ்வாயின் தரைப் படையின் மாதிரியை கிண்டி எடுத்த இடத்தில் வெண்ணிறப் படை ஒன்று அவதானிக்கப்பட்டிப்பதைக் காட்டும் படம்.

பீனிக்ஸ் தொடர்ந்தும் தனது ஆய்வுப் பணிகளை செய்து வரும் நிலையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மேலும் பீனிக்ஸ் செய்யும் ஆய்வுகளுக்கான முடிவுகள் பெறப்படும் போது மனிதன் வியக்கத்தக்க பல தகவல்கள் பெறப்படப்படலாம்.

இது குறித்த மேலதிக தகவல்கள் இங்கு.

-------------------------------------

மேலதிக தகவல் (20-06-2008)

செவ்வாயில் பனி படிகத் துகள்:

மண்ணில் வெள்ளையாகத் தெரிவது பனித் துகள் என்று கருதப்படுகிறது

செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பு குறித்து ஆராய்ந்து தகவல் வெளியிட்டு வருகின்ற நாசா நிறுவனத்தின் ஃபீனிக்ஸ் விண்கலம், அங்கு பனிப் படிகங்கள் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறது என்று தாம் நம்புவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்த வார முற்பகுதியில் செவ்வாயின் துருவப் பகுதியில், தனது இயந்திரக் கரத்தினால், சிறிய அளவிலான அகழ்வு ஒன்றை மேற்கொண்ட ஃபீனிக்ஸ் விண்கலம், அதிலிருந்து பல பிரகாசமான துகள்களை வெளியே எடுத்தது.

அவை உப்பாக இருக்கலாம் என்று முன்னர் நம்பப்பட்டது, ஆனால், வியாழனளவில் அவை மறைந்துவிட்டன.

உப்பு ஆவியாகாது என்றும், தாம் கண்டுபிடித்தது பனிக்கட்டிதான் என்பதற்கு இது ஒரு ஏற்புடைய ஆதாரம் என்றும், இந்த ஃபீனிக்ஸ் விண்கலத் திட்டத்தின் தலைமை விஞ்ஞானியான அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீட்டர் ஸ்மித் கூறியுள்ளார்.

- bbc/tamil

மேலும் புதிய தகவல்கள் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:49 pm

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

picture is cute

good information - interesting one

thanks

Tue Jun 17, 02:02:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

செவ்வாயில் பனி படிகத் துகள்: ஃபீனிக்ஸ் விஞ்ஞானிகள்

செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பு குறித்து ஆராய்ந்து தகவல் வெளியிட்டு வருகின்ற நாசா நிறுவனத்தின் ஃபீனிக்ஸ் விண்கலம், அங்கு பனிப் படிகங்கள் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறது என்று தாம் நம்புவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்த வார முற்பகுதியில் செவ்வாயின் துருவப் பகுதியில், தனது இயந்திரக் கரத்தினால், சிறிய அளவிலான அகழ்வு ஒன்றை மேற்கொண்ட ஃபீனிக்ஸ் விண்கலம், அதிலிருந்து பல பிரகாசமான துகள்களை வெளியே எடுத்தது.

அவை உப்பாக இருக்கலாம் என்று முன்னர் நம்பப்பட்டது, ஆனால், வியாழனளவில் அவை மறைந்துவிட்டன.

உப்பு ஆவியாகாது என்றும், தாம் கண்டுபிடித்தது பனிக்கட்டிதான் என்பதற்கு இது ஒரு ஏற்புடைய ஆதாரம் என்றும், இந்த ஃபீனிக்ஸ் விண்கலத் திட்டத்தின் தலைமை விஞ்ஞானியான அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீட்டர் ஸ்மித் கூறியுள்ளார்.

bbc/tamil

Sat Jun 21, 08:22:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க