Tuesday, June 17, 2008

ஓரினச் சேர்கையாளர்கள் பிறப்பால் உருவாகின்றனர்.



சாதாரண சோடி.

மனிதர்களிடையே ஆண்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்களின் மூளையில் சில வேறுபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. மூளையைக் "ஸ்கான்" செய்வதுனூடு பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இவை அவதானிக்கப்பட்டுள்ளன.

சுவீடனில், சுமார் 90 ஆளானவர்கள் (Adults) மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து பெறப்பட்ட முடிவின் பிரகாரம் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களின் மூளை அரைக்கோளங்களும் பெண் பிறபால் (heterosexual அல்லது சாதாரண பெண்) சேர்க்கையாளர்களின் மூளை அரைக்கோளங்களும் ஒரே தன்மையுடனவாக அமைந்திருக்க பெண் ஓரினச் சேர்க்கையாளர்களின் மூளை அரைக்கோளங்களும் ஆண் பிறபால் (சாதாரண ஆண்) சேர்க்கையாளர்களின் மூளை அரைக்கோளங்களும் வேறொரு வகையில் ஒரே தன்மையுடையனவாக அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளன.

ஆனால் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களின் மூளை அரைக்கோளத்தை விட ஆண் பிறபால் (சாதாரண ஆண்) சேர்க்கையாளர்களின் வலது மூளை அரைக்கோளம் பெரிதாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதே அளவு மூளை அரைக்கோளம் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களிலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி ஆண் ஓரினச் சேர்கையாளர்களுக்கும் சாதாரண பெண்களுக்கும் மூளையின் amygdala பகுதியில் இடது பக்கமாக அதிக நரம்பிணைப்புக்கள் காணப்படும் அதேவேளை சாதாரண ஆண்களுக்கும் பெண் ஓரினச் சேர்கையாளர்களுக்கு வலதுபக்கமாக அதிக நரம்பிணைப்புக்கள் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனாலேயே ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் பெண் தன்மையை வெளிப்படுத்துவதும் பெண் ஓரினச் சேர்கையாளர்கள் ஆண் தன்மையை வெளிப்படுத்துவதுமாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள லண்டனில் இருக்கும் Queen Mary, University of London ஐ சேர்ந்த விரிவுரையாளர் Dr Qazi Rahman, இந்த கண்டுபிடிப்புக்கள் ஓரினச் சேர்கையாளர்கள் பிறப்பால் அவர்கள் முளையத்தில் இருக்கும் போதே தோன்றிவிடுகின்றனர் என்பதை உறுதி செய்வதாகக் கூறியுள்ளார். அதற்காக அவர்களைப் புறக்கணிப்பது சரியானதாக இருக்காது என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:48 pm

1 மறுமொழிகள்:

Blogger SurveySan விளம்பியவை...

same pinch.
http://surveysan.blogspot.com/2008/06/ssm-same-sex-marriage.html

Tue Jun 17, 06:56:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க