Monday, June 16, 2008

"சுப்பர்" பூமிகள் கண்டுபிடிப்பு.



கிட்டத்தட்ட சூரியனின் பருமனை ஒத்த நட்சத்திரமென்றை சுற்றி வரும் பூமியைப் போல முறையே 4.2, 6.7 மற்றும் 9.4 மடங்கு அதிக பருமனுடைய மூன்று "சுப்பர் - பூமிகள்" (புதிய கோள்கள்) விண்ணில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எம்மில் இருந்து சுமார் 42 ஒளியாண்டுகளுக்கு அப்பால் எமது சூரியனை விட சற்றுச் சிறிய HD 40307 எனும் குறியீட்டு நாமம் இடப்பட்ட நட்சத்திரத்தைச் சுற்றி இக்கோள்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இவை பூமியை விடப் பருமன் கூடியவையாக அமைந்திருப்பதால் இவற்றுக்கு "சுப்பர்" பூமிகள் (super-Earths) என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை எமது சூரியக் குடும்பத்தில் உள்ள நெப்ரியூன், யுரேனஸ் கோள்களை விடச் சிறியனவையாகும்.

இத்தகவல்கள் சமீபத்தில் பிரான்சில் நடந்த விண்ணியலாளர்கள் மாநாடு ஒன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவதானிப்புக்கள் மத்திய சிலியில் உள்ள La Silla Observatory இல் இருக்கும் தொலை நோக்கிகளையும் அவற்றுடன் கூடிய Harps (High Accuracy Radial velocity Planet Searcher) தொலைநோக்குப் பொறிகளையும் பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளன என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணில் இதுவரை சுமார் 270 கோள்கள் சூரியக் குடும்பத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பல சூரியனை ஒத்த நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கோள்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:34 pm

5 மறுமொழிகள்:

Blogger வடுவூர் குமார் விளம்பியவை...

நன்றி.

Tue Jun 17, 12:08:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நீண்ட நாட்களின் பின் வடுவூராரின் பின்னூட்டல் நன்றியோட வந்திருக்கிறது. நலமாக உள்ளீர்களா வடுவூர் குமார். :)

நட்புடன் குருவிகள்.

Tue Jun 17, 06:56:00 am BST  
Blogger Athisha விளம்பியவை...

நல்ல பதிவு , நன்றி

Tue Jun 17, 05:34:00 pm BST  
Blogger கோவி.கண்ணன் விளம்பியவை...

அருமையான தகவல்கள்

சுப்பரில் வீட்டுமனை விலை விசாரிச்சு சொல்லுங்க...நம்ம பூமியில் கட்டுப்படியாகல.

Wed Jun 18, 03:10:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

புரியுது கோவி.கண்ணன் உங்கள் ஆதங்கம். எதுக்கும் நாசாவின் காதில உங்க சங்கதியையும் போட்டு வைக்கிறது நல்லம் தான். :)

Wed Jun 18, 07:18:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க