Wednesday, June 18, 2008

நல்ல கொலஸ்ரோல் இதயத்தைப் பாதுகாக்கிறது.



கொலஸ்ரோல் மூலக்கூறு மாதிரி வடிவம்.

பொதுவாக மக்களிடத்தில் கொலஸ்ரோல் என்றால் இதயப் பாதிப்பை வர வைக்கும் ஒரு கெட்டது என்ற கண்ணோட்டம் இருக்கிறது.

ஆனால் கொலஸ்ரோலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நல்ல கொலஸ்ரோல் (HDL) மற்றது கெட்ட கொலஸ்ரோல்.

இந்த நல்ல கொலஸ்ரோலின் அளவைக் குருதியில் அதிகரிப்பதில் பங்கெடுக்கக் கூடியது என்று கருதப்படும் சில வகை CETP மரபணுக்கள் உலக சனத்தொகையில் கிட்டத்தட்ட 33% பேரிடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரபணுக்களைக் காவுபவர்களில் நல்ல கொலஸ்ரோலின் அளவு குருதியில் அதிகரிக்க செய்யப்படுவதால் அவர்களில் இதயப் பாதிப்பு மற்றவர்களை விட ஏறக்குறைய 5% தால் குறைய வாய்ப்பிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

குருதியில் உள்ள கெட்ட கொலஸ்ரோலின் அளவை குறைத்துக் அதன் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதயப் பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என்பதை விஞ்ஞானிகள் ஏலவே நன்கு அறிந்திருந்த போதும் இந்த புதிய கண்டுபிடிப்பானது அவர்களிடத்தில் கெட்ட கொலஸ்ரோல் சார்ந்து ஏற்படும் இதய நோய்க்கு எதிராகப் போராடுவதில் CETP மரபணுக்கள் மீது செய்யப்படும் கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா என்பதில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழமையாக நல்ல கொலஸ்ரோலின் அளவை அதிகரிக்க CETP மரபணுவின் செயற்பாட்டைத் தடுக்கக் கூடிய மருந்துகளை பரீட்சார்த்தமாக வழங்குவது நடைமுறையில் இருக்கும் நிலையில், சில வகை CETP மரபணுக்கள் நல்ல கொலஸ்ரோலின் அளவை அதிகரிக்க உதவக் கூடியது என்ற இப்புதிய கண்டுபிடிப்பு விஞ்ஞானிகள் மத்தியில் குறித்த மரபணு மீது செல்வாக்குச் செய்யும் மருந்துகளின் தன்மையை மாற்றி அமைக்க வேண்டிய நிலை குறித்து சிந்திக்கத் தூண்டியுள்ளது.

எனினும் இறுதி முடிவுகள் எட்ட முதல் இந்த மரபணுக்களின் செயற்பாட்டில் செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் நல்ல கொலஸ்ரோலின் செயற்பாடுகளுக்கும் இதயப் பாதிப்புக்களைக் அவை குறைக்கும் செயற்பாடுகளுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக மனித உயிரியல் விஞ்ஞானிகள் கூற்கின்றனர்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:49 am

2 மறுமொழிகள்:

Blogger puduvaisiva விளம்பியவை...

Hi My Dear Kuruvi

How are you

I read your article is nice many people have afraid and confuse this mattter so they read your article they are very happy.

puduvai siva

Wed Jun 18, 09:35:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி சிவா.

Wed Jun 18, 12:57:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க