Thursday, June 19, 2008

"அனுமான்" போன்ற உயிரி அவதானிக்கப்பட்டுள்ளது.அனுமான் உருவ இராட்சத மனிதன் - (சித்திரம்)

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் (Meghalaya) Garo hills பகுதியில் ஒதுக்குப்புறமாக உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் சில இடங்களில், காட்டு மனிதன் (அனுமான் உருவ மனிதன்) ஆங்கிலத்தில் ape-like creature அல்லது நேபாள வழக்கில் yeti அல்லது மேகாலய வழக்கில் mande barung என்று அழைக்கப்படும் உயிரி அவதானிக்கப்பட்டுள்ளதாக அதனை அவதானித்த பலரும் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சுமார் 10 அடி (3 மீற்றர்கள்) உயரமுள்ள சுமார் 300 கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கலாம் என்று கருதப்படும் இந்த காட்டு மனிதன் உடல் முழுதும் உரோமத்தால் மூடப்பட்டு கறுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருப்பதுடன் தாவரபோசணையை உணவுப் பழக்கமாகக் கொண்டிருப்பதாக அவனை அவதானித்த மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காட்டு மனிதன் அல்லது அனுமான் உருவ மனிதன் சிறிய குழுவாக [இரண்டு வளர்ந்தவர்கள் - (ஆண் + பெண்) மற்றும் இரண்டு இளையவர்கள் அல்லது குழந்தைகள் கொண்ட குழுவாக] நடமாடுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.சுவட்டு நிலையில் அவதானிக்கப்பட்ட அனுமான் உருவ மனிதனின் பாதச் சுவடு.

இதற்கிடையே இந்த விசேட உயிரி பற்றிய தகவல்களைத் திரட்டி வரும் ஆய்வாளர்கள் இதன் உரோமம் என்று கருதத்தக்க மாதிரியை சேகரித்திருப்பதுடன் காட்டுப் பகுதியில் இவற்றின் 46 சென்ரிமீற்றர்கள் நீளமுள்ள பாரிய பாதங்கள் பதிக்கப்பட்ட அடையாளங்கள் குறித்த தகவல்களையும் சேகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.yeti அல்லது அனுமான் உருவ மனிதனின் மயிர் பிரித்தானியாவில் நுணுக்குக்காட்டி பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட படம். 200 மடங்கு உருப்பெருப்பிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை இந்த உயிரிகளை நேரடியாக ஒளிப்பதிவு செய்யவோ அல்லது புகைப்படம் எடுக்கக் கூடிய வாய்ப்பையோ, ஆய்வாளர்களோ அல்லது இவற்றை அவதானித்த மக்களோ அவற்றைக் காணும் பொழுதுகளில் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த உயிரியின் இருப்புப் பற்றிய நம்பகத்தன்மை இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை.இராட்சத காட்டு மனிதன் அவதானிக்கப்பட்ட காட்டுப் பகுதி.

மேலதிக தகவல் இங்கு. சில காணொளிகளும் உண்டு.

yeti இன் மயிர் பிரித்தானியாவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது பற்றிய விபரங்கள் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:00 am

4 மறுமொழிகள்:

Blogger Irai Adimai விளம்பியவை...

இந்த அனுமானால பறக்க முடியுமா நெஞ்சை பிளந்து கடவுளை காட்ட முடயுமா சஞ்சீவி மலையை தூக்க முடியுமா இந்த தகவலையும் கலெக்ட் பண்ணி சொல்லி இருந்தா நல்ல இருக்கும் .ஒரு சின்ன சந்தேகம் கூட அந்த அனுமான் கட்டப் பிரம சாரி இந்த அனுமான குழந்தை குட்டியோட பார்த்ததா சொல்லுறாங்களே. சரி தான் இன்னிக்கு உலகத்துல அப்படி எல்லாம் இருக்க முடியுமா ?

Thu Jun 19, 09:23:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

அனுமான் தாவுவார் பறக்கார் இறை அடிமை அவர்களே. :)

உங்கள் பின்னூட்டலுக்கு நன்றிகள்.

Thu Jun 19, 09:59:00 am BST  
Blogger அதிஷா விளம்பியவை...

நல்ல தகவலுக்கு நன்றி

Thu Jun 19, 12:10:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

Yeti அல்லது அனுமான் வடிவ மனிதனின் மயிர் என்று கருதத்தக்க மயிர்கள் இந்தியாவில் மேகாலயா மாநிலத்தில் அடந்த காடுகள் அடங்கிய மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

தற்போது அவற்றை பிபிசி நிறுவனத்தின் உதவியுடன் பிரித்தானியாவில் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

முதன் முறையாக அவை நுணுக்குக்காட்டிப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு தற்போது மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட நுணுக்குக்காட்டிப் பகுப்பாய்வில் இருந்து தெளிவான முடிவுகள் எதனையும் எட்ட முடியவில்லை இருப்பினும் இந்த மயிர் காட்டு வாழ் கரடி அல்லது பன்றி அல்லது பிற குரங்குகளினதோ அல்ல என்பதைச் சொல்லக் கூடியதாக இருக்கிறது.

இதுவரை நடத்திய ஆய்வுகளின் பிரகாரம் "அனுமான் மனிதன் இருக்கிறான்" என்ற நம்பிக்கையை ஆதார பூர்வமாக தகர்க்க முடியவில்லை. ஆதலால் இம்மயிர் மேலதிகமாக மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் பிரிட்டனில் இந்த மயிரை பகுப்பாய்வு செய்தவர்களில் ஒரு அறிவியலாளர்.

"We now know for definite that these hairs do not belong to Asiatic black bear, they do not belong to a wild boar and they do not resemble hairs from various species of macaque monkeys. These hairs remain an enigma," said wildlife biologist and ape conservation expert Ian Redmond.

மேலும் விபரங்கள் கீழுள்ள இணைப்பில் உண்டு.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7525060.stm

Sat Jul 26, 11:58:00 am BST  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<<முகப்புக்குச் செல்க