Thursday, June 19, 2008

புற்று நோயக்கு குளோனிங் முறை சிகிச்சை.



தோல் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்

மிகவும் மோசமாக தோல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின், நோய் எதிர்ப்பு இரத்த அணுவை உயிர் பிரதியாக்கம் செய்து, அதன் மூலம் அவரது நோய்க்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள்.

ஆனால், பல்வேறுபட்ட புற்று நோய்களுக்கு எதிரான, இந்த சிகிச்சை முறையின் செயற்திறனை உறுதிசெய்யும் வகையில், அது மேலும் பல ஆய்வுகளுக்கும், பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

புற்று நோயை எதிர்க்கக் கூடிய அணுக்களை தனிமைப்படுத்தி, ஆய்வு கூடத்தில், பல மில்லியன் கணக்கிலான அவற்றின் பிரதிகளை உருவாக்கி, அவற்றை மீண்டும் உடலில் செலுத்துவதே இந்த பொறிமுறையாகும்.

இரு மாதங்களில் அவரது சுவாசப்பையிலும், உடற்பாகங்களிலும் உள்ள கட்டிகள் மறைந்ததுடன், இரு வருடங்களின் பின்னர் அவர் முற்றிலும் குணமடைந்தார்.

நன்றி:பிபிசி/தமிழ்

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 9:39 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க