Friday, April 24, 2009

புதிய வகை இரசாயன (வேதியல்) மூலக்கூறு.



சாதாரண Rb அணு Rydberg அணு நிலைக்கு கதிர்ப்புக்கள் கொண்டு அருட்டப்படும் காட்சி.

Rydberg அணு ( அணுக் கருவைச் சுற்றி உள்ள இலத்திரன் ஓடுகளில் சாத்தியமான, மிக அதிக தூரத்தில் அருட்டப்பட்ட (excited) நிலையில் தனி இலத்திரனைக் கொண்டிருக்கும் அணு Rydberg அணு எனப்படுகிறது) வுக்கும் சாதாரண அணு ஒன்றுக்கும் இடையில் மிக நலிவான மற்றும் விளக்கக் கடினமான மூலக்கூற்றுப் பிணைப்பை உருவாக்கி புதிய மூலக்கூறு (Rydberg மூலக்கூறு) ஒன்றை இரசாயனவியல் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

வழமையாக அணுக்கள் இலத்திரன் அடிப்படையில் அமையும் அயன், பங்கீடு அல்லது ஈதல் பிணைப்புக்கள் மூலம் இணைக்கப்பட்டு மூலக்கூறுகள் தோற்றிவிக்கப்படும் நிலையில் இந்த மூலக்கூறு வேறொரு முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டு றுபிடியம் - Rubidium (Rb) (ஆவர்த்தன அட்டவணையில் - Periodic table கூட்டம் 1 க்குரிய மூலகம்) அணுக்களில் ஒன்று Rydberg அணுவுக்குரிய இயல்பிலும் மற்றையது சாதாரண நிலையிலும் சாத்தியமான நெருக்கத்தில் அதி குளிர் வெப்பநிலைக்கு கொண்டு வரப்பட்ட போது அவ்விரு அணுக்களிடையேயும் இலத்திரன் நிலைக் கவர்ச்சி ஏற்பட்டு மூலக்கூற்றுப் பிணைப்பு உருவாகி ரிட்பேர்க் (Rydberg) மூலக்கூறு எனும் புதிய மூலக்கூறு உருவாகியிருக்கிறது.

இந்தப் பிணைப்பை உருவாக்க வாயு நிலையில் இரண்டு அணுக்களும் 100 நனோ மீற்றர்கள் தூர நெருக்கத்துக்கு கொண்டு வரப்பட வேண்டி இருந்ததுடன் வெப்பநிலை -273 பாகை செல்சியசை அணுகக் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொள்கை அளவில் பேசப்பட்டு வந்த இந்தப் பிணைப்பு நிலை இப்போதுதான் முதன்முறையாக ஆய்வுசாலையில் பரிசோதனை அளவில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.


மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:49 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க