Wednesday, March 19, 2008

மெதேன் மற்றும் நீராவியுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு.



எமது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 63 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள ஒரு நட்சத்திரம் ஒன்றை மிக நெருங்கிய பாதையில் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும், எமது சூரியக் குடும்பத்தில் உள்ள வியாழன் கோளை ஒத்த பருமனுடைய கோளின் வளிமண்டலத்தில் மெதேன் மற்றும் நீராவி போன்ற காபன் சார் உயிரின உற்பத்திக்கு அடிப்படையான இராசாயனக் கூறுகள் இருப்பதை விண்ணியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனினும் HD 189733b என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்டுள்ள இக்கோள் அதன் சூரியனை மிக நெருங்கிச் சுற்றிவருவதால் அதன் வெப்பநிலை காபன் சார் உயிரினங்கள் அக்கோளில் இருப்பதற்கான சாத்தியக் கூறை அதிகம் கொண்டிருக்கவில்லை என்றும் விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

விண்ணியல் ஆய்வாளர்கள் இதுவரை சுமார் 270 கோள்களை எமது சூரிய உடுத்தொகுதிக்கு அப்பால் இனங்கண்டுள்ளனர்.அவற்றுள் வளிமண்டத்தில் நீராவி மற்றும் மெதேன் கொண்ட கோளாக இந்தக் கோள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்..!

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 10:17 pm

2 மறுமொழிகள்:

Blogger வடுவூர் குமார் விளம்பியவை...

நமக்கு தெரியாமல் இன்னும் அதிகமான கோள்கள் இன்னும் இருக்கக்கூடும்.

Wed Mar 19, 11:19:00 pm GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

அகண்டு விரிந்து கொண்டிருக்கும் அகிலத்தில் எமது அறிவியலுக்கு எட்டாத எவ்வளவோ விடயங்கள் உள்ளன வடுவூர் குமார்.. அந்த வகையில் உங்கள் கூற்று உண்மையே.

வடுவூர் குமார்.. நீங்கள் எமது வலைப்பூவின் வாசகனாகவே மாறிட்டீங்க.நன்றிகள். உங்கள் போன்ற ஒரு சிலரின் பின்னூட்டல்களையே இங்கே காணக்கிடைக்கிறது. அறிவியல் என்றால் அவ்வளவு அலேர்ஜியா.. மற்றவர்களுக்கு..??! :)

Thu Mar 20, 07:38:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க