Friday, February 15, 2008

அமெரிக்க செயற்கைக் கோளைச் சுட்டு வீழ்த்த முடிவு.



கப்பல் ஒன்றில் இருந்து அமெரிக்க ஏவுகணை விண்ணோக்கிப் பாயும் காட்சி. (பழைய படம்)

கட்டுப்பாட்டை இழந்து புவியை நோக்கி வந்து கொண்டிருக்கும் அமெரிக்க உளவு செயற்கை கோளை ராணுவ ஏவுகணை மூலம் சுட்டுத் தள்ளி கீழே கொண்டு வருவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அடுத்த மாதம் புவியின் மீது மோதி, பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் அமெரிக்க உளவு செயற்கைகோளை எந்தவித ஆபத்தும் இன்றி பத்திரமாக கீழே கொண்டு வருவதற்கு அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் இந்த உளவு செயற்கை கோள் புவியின் வளி மண்டலத்தில் மீண்டும் நுழையும் போது ராணுவ ஏவுகணை மூலம் சுட்டுத்தள்ளி கீழே கொண்டு வருவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை அதிபர் புஷ் அந்நாட்டின் ராணுவ தலைமையக மான பெண்டகனுக்கு பிறப்பித்துள்ளார்.

ஆயினும் இந்த நடவடிக்கைக்கான சரியான தேதியை பெண்டகன் இன்னும் அறிவிக்கவில்லை. அடுத்த சில தினங்களில் கப்பல் ஒன்றிலி ருந்து ஏவுகணையை செலுத்தி இந்த உளவு செயற்கை கோளை கீழே கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இந்த உளவு செயற்கைகோள் புவியின் மீது மோதுவதால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை குறைக்க இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்படவிருப்பதாக அந் நாட்டின் தேசிய பாதுகாப்பு உயரதிகாரி ஜேம்ஸ் ஜெப்ரிஸ் தெரிவித்துள்ளார். ஆயினும் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக அமையுமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

புவியின் வளிமண்டலத்தில் அந்த உளவு செயற்கைகோள் மீண்டும் நுழையும்போது ஸ்டாண்டர்டு ஏவுகணை என்ற ஏவுகணையை செலுத்தி அந்த செயற்கைகோளை தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்ளப் படவிருப்பதாகவும், அதன்பிறகு அந்த செயற்கைகோள் வளிமண்டல எதிர்ப்புகளால் புவியின் மீது மோதுவது தவிர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவதாக செயற்கைகோளில் உள்ள எரிபொருள் கலனை நேரடியாக தாக்கி பூமிக்கு திரும்பி கொண்டு வரப்படும் எரிபொருள் அளவை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலதிக தகவல் இங்கு- பிபிசி

தமிழ் வடிவம்: malaisudar.com/yarl.com

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:07 pm

3 மறுமொழிகள்:

Blogger HK Arun விளம்பியவை...

குருவியின் முயற்சிகள் பிரயோசனமானது.

நன்றி!

Fri Feb 15, 06:06:00 pm GMT  
Blogger CVR விளம்பியவை...

உங்கள் பதிவின் எழுத்துக்கள் சிகப்பு நிறத்தை விட வேறெதாவது Dark நிறத்தில் இந்தால் பதிவின் background நிறத்தோடு ஒத்துப்போகும் என்று தோன்றுகிறது.
சிகப்பு நிறம் படிப்பதற்கு சற்றே அயற்சி தருகிறது!!
தோன்றியது,சொன்னேன்! தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்!
அறிவியல் செய்திகளை தரும் தங்கள் முயற்சி பாராட்டுக்குரியது!!
வாழ்த்துக்கள்!! :-)

Sat Feb 16, 11:28:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி நண்பர்களே. சிவப்பை நான் முக்கியமான அறிவிப்புக்களை செய்யப்பாவிக்கின்றேன். எதிர்காலத்தில் மாற்றி அமைத்துக் கொள்கின்றேன். உங்கள் விமர்சனங்களுக்கு நன்றி. அத்துடன் மேலும் உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Thu Feb 21, 08:36:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க