Thursday, February 07, 2008

உடற்பருமன் அதிகரிப்பு மரபணு சார்ந்தும் உள்ளது.



மனிதர்களில் உடற்பருமன் அதிகரிப்பு இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு இட்டுச் செல்கின்றது என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உடற்பருமன் அதிகரிப்புக்குரிய காரணிகளாக அளவுக்கு மிஞ்சிய உணவு உள்ளெடுத்தல், போதிய உடற்பயிற்சியின்மை போன்றன முதன்மைக் காரணிகளாகக் கருதப்பட்டு வரும் நிலையில் சமீபத்திய ஆய்வு முடிவின் பிரகாரம் சுமார் 77% உடற்பருமன் அதிகரிப்பு மரபணு சார்ந்து தீர்மானிக்கப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது. அதற்காக உடற்பருமன் அதிகரிப்பில் ஏனைய காரணிகளின் முக்கியத்துவம் புறக்கணிக்கப்படுவதாக கருதக் கூடாது.

உடற்பருமன் அதிகமுள்ள பெற்றோரின் பிள்ளைகளும் உடற்பருமன் அதிகரிப்பு உபாதைக்கு உள்ளாகக் கூடிய சாத்தியங்களை அதிகம் கொண்டுள்ளனர். எனவே அப்படியான பிள்ளைகளும் ஏனையவர்களும் உணவுக் கட்டுப்பாடு மற்றும் கிரமமான உடற்பயிற்சி போன்றவற்றை சிறுவயது முதலே ஆரம்பிப்பது பிற்காலத்தில் வளமான வாழ்வுக்கு வித்திடுவதாக அமையும்.

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 11:09 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க