Wednesday, August 13, 2003

ஓஸோன் படலச் சிதைவைக் கண்காணிக்கவென ஒரு செயற்கைக் கோளை அமெரிக்கா விண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஒவ் ஓஸோன் படலச் சிதைவு சூரியனில் இருந்து புற ஊதாக் கதிர்கள்(UV Rays) பூமிக்குள் ஊடுருவ வகை செய்வதுடன்... அதனால் உயிரினங்களில் (குறிப்பாக மனிதனில் தோல் புற்று நோய்கள்,கண் பாதிப்புக்கள் மற்றும் பிற நோய்கள் ஏற்பட காரணமாகவும் அமைகின்றன) பாதிப்பை ஏற்படுத்தவும் வகை செய்கின்றன...! இவ் ஓசோன் படலம் பிற தீய கதிர்ப்புக்கள் பூமிக்குள் ஊடுருவுவதிலிருந்து பாதுகாக்கும் ஒரு வடிகட்டியாக இருந்து பூமியைப் பாதுகாக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது...இது மனிதனின் செயற்பாடுகளால் (CFC வாயு வெளியேற்றம்,விண் உந்து வாகனங்களின் செலுத்துகைகள் என்பவை உள்ளிட்ட சில காரணங்களால்) சிதைவுக்குள்ளாகி வந்தமையும் தற்போது நிலமையில் சிறிது முன்னேற்றம் தென்படுவதும் கவனிக்கத்தக்கது....!

பதிந்தது <-குருவிகள்-> at 9:52 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க