Saturday, May 15, 2004

வேற்றுக் கிரகவாசிகளுடன் ஒரு கோள்...??!

வேற்றுக் கிரகவாசிகளைக் கொண்டது என ஊகிக்கப்படும் ஒரு கோளை (கிரகத்தை) பூமியில் இருந்து 100 ஒளியாண்டுகளுக்கு அப்பால், விண்ணில் சஞ்சரிக்கும் கபிள் விண்ணியல் தொலைக்காட்டியின் இன்பிராரெட் (infrared) படப்பிடிப்புக் கருவி மூலம் அமெரிக்க விண்ணியலாளர்கள் நேரடியாகப் படம் பிடித்துள்ளனர். இதுவரை சூரியத் தொகுதிக்கு வெளியில் அறியப்பட்ட கிட்டத்தட்ட 120 கோள்களில் எதுவுமே இப்படி நேரடியாக படம் பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் இது உண்மையில் ஒரு கோள்தானா என்று உறுதி செய்வதற்கு இன்னும் காலம் எடுக்கும் என்றும் இது ஒரு முதல் நிலைக் கண்டு பிடிப்பென்றும் இக்கோளின் அமைவிடம் தொடர்பாக கருத்துக் கூற மறுத்துவிட்ட ஆய்வாளர்கள், இக்கோள் வியாழன் கிரகத்தைப் போல் ஐந்து தொடக்கம் பத்து மடங்கு பெரிதாகவும், அதன் பிரதான நட்சத்திரத்தில் இருந்து சுமார் 4,500 மில்லியன் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவலுக்கு

பதிந்தது <-குருவிகள்-> at 1:33 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க