Friday, September 14, 2007

ஜப்பானின் சந்திரனுக்கான பயணம் ஆரம்பம்.



சந்திரனை ஆய்வு செய்ய என்று மூன்று விண்கலங்களை ( ஒரு பிரதான கலமும் இரண்டு செய்மதிகளும்) ஜப்பான் இன்று விண்ணுக்கு ஏவியது. 1960 களில் அமெரிக்கா சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பியதாகக் கூறும் சந்திரப் பயணத்துக்குப் பின்னர் முக்கியத்துவம் பெற்ற பயணமாக இந்த ஜப்பானின் சந்திரனை ஆய்வு செய்வதற்கான பயணம் அமையும்.

ஜப்பானிய விண்கலங்கள் சந்திரனில் தரையிறங்குவதற்கு பதிலாக சந்திரனுக்கு மேலே 100 கிலோமீற்றர்கள் தொலைவில் நிலையெடுத்து சந்திரனைச் சுற்றி வந்தபடி.. ஆய்வுகளைச் செய்யவுள்ளன என்று ஜப்பானிய விண்வெளி ஆய்வு மையம் Jaxa அறிவித்துள்ளது.

முழுக்க முழுக்க ஜப்பானிய மொழியில் உரையாடி..(ஆங்கிலத்தில் தனித்து மொழிபெயர்ப்பு அளிக்கப்பட்டது) இந்தப் பயணம் ஆரம்பிக்கப்படுவதை மக்களுக்கு வெளிப்படுத்தினர். ஜப்பானியர்களின் தேசிய மற்றும் மொழிப் பற்றை பிற மொழி பேசும் மக்களும் கருத்தில் கொள்வது சிறப்பு.

மேலதிக தகவல் இங்கு

இப்பயணத்தின் காணொளி

Thanks - yarl.com

பதிந்தது <-குருவிகள்-> at 11:37 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க