Sunday, September 16, 2007

பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தின் பிறப்புப் பற்றி



குளிரான இருள் கூறுடன்,கட்டமைப்புக்கள் clumpy யாக தோன்றும் வகையில் மாறல்.

ஆரம்ப பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரம் தனித்துவத்தன்மை மிக்க நீண்ட இழைபோன்ற அமைப்பில் இருந்து உருவாகி இருக்க வேண்டும் என்று கணணி உதவி கொண்டு பெறப்பட்ட வடிவமைப்பு ஆய்வியில் இருந்து விஞ்ஞானிகள் முன்மொழிந்துள்ளனர்.

இப்படியான கட்டமைப்புக்கள் விண்ணில் இருப்பது குறித்து விஞ்ஞானிகள் சிறிய அளவிலான விளக்கத்தையே கொண்டுள்ளனர்.



முதல் நட்சத்திரம் பிறக்க வாய்ப்பான பல ஒளியாண்டுகள் நீளமுள்ள தனித்துவ இழை சூடான இருள் கூறில் இருந்து உருவாகும் கணணி வடிவமைப்புக் காட்சி.

அதுமட்டுமன்றி பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள கூறுகளில் 75% மானவை இருளானவை என்றும் இவை மனிதன் உணரத்தக்க ஒளி வடிவங்களை வெளியிடுவதில்லை என்றும் ஆனால் இவற்றின் ஈர்ப்புத்தாக்கம் பிரபஞ்சத்தில் நிறைந்துள்ளது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

(பிரபஞ்சம் தொடர்பில் விஞ்ஞானிகளால் விளக்கம் அளிக்க முடியாத பல விடயங்கள் உண்டு எனினும் இவை குறித்த ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

பிரபஞ்ச அடிப்படையில் இயற்கையில் இவைதான் உண்மைகள் என்று இன்னும் அறுதியிட்டு வரையறுக்க முடியாத நிலையே அறிவியல் ரீதியாகவும் தொடர்கிறது.)

மேலதிக தகவல் இங்கு.

தகவல் பெறப்பட்ட இடம். yarl.com

பதிந்தது <-குருவிகள்-> at 9:35 am

2 மறுமொழிகள்:

Blogger வடுவூர் குமார் விளம்பியவை...

நிச்சயமாக சொல்லமுடியாதது வான்வெளியில் மட்டும் அல்ல பூமியிலும் இருக்கு.

Sun Sept 16, 03:19:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

உங்கள் வருகைக்கும் கருதுக்கும் நன்றிகள்.

Sun Sept 16, 03:57:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க