Wednesday, September 26, 2007

மூளைக் கோளாறே தவறான பாலியலுக்கு தூண்டுகிறது.



"14 வயதுச் சிறுவனுடன் 45 வயதுப் பெண் ஆசிரியை ஓட்டம்" இப்படியெல்லாம் பல செய்திகள் படித்திருப்பீர்கள். இவர்களின் பின்னால் உள்ள அறிவியல் உண்மை என்ன..??!"

சிறுவர்கள் சிறுமிகள் உலகின் எதிர்காலத்தின் தூண்கள். இன்று பெரியவர்களாக உள்ளோரும் சிறுவன் அல்லது சிறுமியாக இருந்து வந்தவர்கள் என்ற வகையில் அந்தந்த வயதில் எழும் ஆசைகளின் அப்பழுக்கற்ற தன்மையை உணர்ந்து அவர்களை ஆனந்தமாக வாழ வைப்பதே உலகில் சாதாரணமாக எதிர்பார்க்கப்படுவது.ஆனால் உலகில் சிலர் சிறுவர்கள் சிறுமிகள் மீது பாலியல் இச்சை கொள்வதைச் செய்கின்றனர்.

பிரித்தானியாவில் இப்படிப்பட்டவர்களையும் சாதாரண பாலியல் தூண்டல் உள்ளவர்களையும் ஆய்வுக்கு உட்படுத்திய போது சிறுவர் பாலியலில் ஈடுபடுவோரின் (paedophiles) மூளையில், சாதாரண (ஆண் - பெண்) பாலியல் தூண்டலுக்குரிய பகுதியான நீள்வளைய மையவிழையத்தின் (Hypothalamus)தொழிற்பாடு குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வகையில் இது மூளையில் ஏற்படும் ஒருவகைக் கோளாறின் பிரதிபலிப்பாக இனங்காணப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இதற்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருந்துகளைக் கண்டறிய இந்த ஆய்வு உதவும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஓரினச் சேர்கை என்று இயற்கைக்கு மாறாக உடலுறவு கொள்வோரின் மூளையின் தொழிற்பாடும் சாதாரண ஆண் - பெண் இனக்கலப்பில் நாட்டமுடைய மனிதர்களின் செயற்பாட்டினிருந்தும் பல வழிகளில் வேறுபட்டது என்பதும் கண்டறியப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 6:59 am

4 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

//ஓரினச் சேர்கை என்று இயற்கைக்கு மாறாக உடலுறவு//

இது இயற்கைக்கு மாறான அல்ல வேனும் என்றால் வழமைக்கு மாறானஎன குறிப்பிடலாம்.

Wed Sept 26, 08:17:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

தரை வாழ் உயிரினங்களில் பாலுறவு என்பது.. புதிய உயிரின் உற்பத்திக்கு தேவையான புணரிக்கலங்களை பாதுகாப்பான முறையில் கலக்க அனுமதித்தலாகும்.

ஓரினச் சேர்க்கை என்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. அதற்கு.. இயற்கையான வரையறை வழங்க முடியாது. இயற்கை எதையும் அர்த்தமில்லாமல் நடைமுறைப்படுத்தவில்லை. எனவேதான் நான் எனது கருத்தில் தெளிவுற இயற்கைக்கு மாறானது என்று குறிப்பிட்டேன். அது வழமைக்கு மாறானதும் கூட என்ற உங்களின் கருத்துக்கும் பொருந்தும்.

நன்றி உங்கள் கருத்துப் பகர்விற்கு.

Wed Sept 26, 02:30:00 pm BST  
Blogger G.Ragavan விளம்பியவை...

இந்தப் பதிவைப் படித்து முடித்ததும் பின்னூட்டங்களைப் படித்து முடித்ததும் ஒன்று தோன்றுகிறது.

மூளையில அது கூட..இது குறைய இருக்குறதால இந்தப் பிரச்சனை வருதுன்னு சொல்றீங்க. பொதுவாவே எந்தக் காரியத்தையும் நல்லாவும் தப்பாவும் செய்றதுக்கு மூளைல கூடக் கொறைய இருக்குறதுதான காரணம்.

அப்படிப் பாத்தா இந்த மூளைல கூடிக்கொறையிறது இயற்கையா வருதா? செயற்கையா வருதா?

இயற்கையா வருதுன்னா...அப்ப அந்தச் செயல் இயற்கைக்கு மாறானதுன்னு எப்படிச் சொல்ல முடியும்? செயற்கையா வருதுன்னா? அது எப்படி வருது?

Wed Sept 26, 08:28:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

மூளையில் குறைகள் இயற்கையானதாகவும் வரலாம்... மனித ஆதிக்கத்தாலும் வரலாம்.

உதாரணத்துக்கு பிறப்புரிமையியல் நோய்கள்.. இவை இயற்கையின் பிறழ்வாலும் வரலாம்.. செயற்கையான காரணிகளாலும் உருவாகலாம்.

ஆனால் இயற்கையின் செயற்பாட்டில் செம்மையானது.. செம்மையற்றது என்ற இரண்டு நிலைகளை மனிதன் உணர்ந்திருக்கிறான். அந்த வடிவில்.. செம்மைக்கு அப்பாலானதை பிழழ்வாகக் கருதி.. கோளாறு என்று சொல்கின்றோம்.

உங்கள் கருத்தாழம் நோக்கிய செல்லத்தக்க பின்னூட்டலுக்கு நன்றிகள்.

Wed Sept 26, 10:18:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க