Tuesday, January 29, 2008

பூமியின் மையப் பகுதி பற்றிப் புதிய தகவல்கள்.

பூமியின் மையப்பகுதி அதாவது கோர் (inner core and outer core) பற்றி மாறுபாடான தகவல்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் பூமியின் உள்ளிடம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

-------------



வாஷிங்டன்: பூமியின் மையப் பகுதியின் கடினத்தன்மை முன்பு கருதப்பட்டதை விட குறைவாகவே உள்ளதாக புவியியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்,

பூமிப் பந்து நான்கு வகையான பகுதிகளைக் கொண்டது. நடுப்பகுதியான இன்னர் கோர் (inner core) கொதிக்கும் குழம்பால் ஆனது. இதையடுத்துள்ள அவுட்டர் கோர் (outer core) சற்று இருகிய பகுதி.

இதன் மேல் மேண்டில் (mantle)என்ற பகுதியும் அதன் மீது நாம் நடமாடும் கிரஸ்ட் (crust) என்ற வெளிப் போர்வையும் அமைந்துள்ளது. இதில் மேண்டிலின் உள்பகுதி மிகவும் கடினத்தன்மை கொண்டதாகக் கருதப்பட்டு வந்தது.

ஆனால், சமீபத்திய ஆய்வுகள் அதன் கடிதனத்தன்மை முன்பு கருதப்பட்ட அளவுக்கு இல்லை என்று நிரூபித்துள்ளன. இந்த மேண்டில் பகுதியில் மிக அதிக சக்தி வாய்ந்த மின்காந்த கதிர்வீச்சுக்கள் உள்ளன. இவை ஒலி அலைகளின் வேகத்தையே கூட குறைத்துவிடும் சக்தி கொண்டவை.

ஒலி அலைகள் எந்த அளவுக்கு இந்த கதிர்வீச்சுக்களால் மட்டுப்படுகின்றன என்பதை வைத்து இந்த மேண்டில் பகுதியின் கடினத்தன்மையை விஞ்ஞானிகள் சோதனையிட்டனர். அப்போது தான் அது அதிக கடினமான நிலையில் இல்லை என்று தெரியவந்தது என சயின்ஸ் டெய்லி இதழ் தெரிவித்துள்ளது.

இந்த உள் மேண்டிலின் அகலம் 660 முதல் 2900 கி.மீ. என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியில் நிலவும் வெப்பம் 2,800 முதல் 6,700 டிகிரி பேரன்ஹீட்டாகும். இங்கு நிலவும் மிக பயங்கரமான அழுத்தம், வெப்பத்தால் இரும்பு அணுக்களின் எலெக்ட்ரான் அமைப்பு கூட வேறு மாதிரியான நிலையில் இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

source: thatstamil.com

பிரதான செய்தி இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 7:12 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க