Friday, June 20, 2008

"சூப்பிகள்" குழந்தைகளில் காது தொடர்பான நோய்த் தொற்றை அதிகரிக்கின்றன.



செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சூப்பி அல்லது Dummy யை பாவிக்கும் குழந்தைகளில் காது தொடர்பான தொற்று நோய்கள் ஏற்படுவது கிட்டத்தட்ட இரண்டு மடங்கால் அதிகரிப்பதாக டச்சு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனால் பெற்றோர்கள் செயற்கை Dummy களை காது தொடர்பான நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடிய குழந்தைகள் பாவிக்க அனுமதிப்பதை தவிர்க்க கேட்கப்படுகின்றனர்.

ஐந்து வருடங்களாக சுமார் 500 டச்சுக் குழந்தைகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வில் இருந்து, Dummy களைப் பயன்படுத்தும் குழந்தைகளில் மற்றவர்களை விட 90% அதிகரித்த நிலையில் காது தொடர்பான தொற்று நோய்கள் மீண்டும் மீண்டும் ஏற்பட சந்தர்ப்பங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.



மனிதக் காதின் அமைப்பு. (பட உதவி: http://en.wikipedia.org/wiki/Ear)

குறிப்பாக மூக்கில் இருந்து வடியும் சுரப்புக்களூடு பக்ரீரியாக்கள் நடுச்செவிக்கு இடம்பெயர Dummy களின் பாவனை உதவக் கூடியதாக இருப்பதால் காதில் நோய்த் தொற்றுக்கள் ஏற்படுவது அதிகரிக்கக் கூடிய வாய்ப்பைக் கொண்டிருக்கலாம் என்று இவ்வதிகரிப்புக் குறித்துக் காரணங்கள் எதிர்வுகூறப்பட்டுள்ளன.

காதுகளில் ஏற்படும் முதன்னிலை நோய்த் தொற்றுக்கள் Dummy களைப் பாவிப்பதால் தொடர்சியாக ஏற்பட ஏதுநிலைகளை வழங்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர். குறிப்பாக acute Otitis media தொற்றுக்களைக் கொண்ட குழந்தைகளில் இது நிகழ அதிக வாய்ப்புள்ளது.

மனிதனில் நடுச் செவிக்கும் தொண்டைக்கும் இடையில் சிறிய கால்வாய் (eustachian tube) வழி தொடர்புள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:22 am

2 மறுமொழிகள்:

Blogger puduvaisiva விளம்பியவை...

Hi Kuruvi

How are you

Yes most of them sell in market chemical dummy for children

you see kuruvi those olden days our Tamilnadu people give their child one biscuit it is name of "OMMA ROTTI" one growing child eat this it is easy to digession.

puduvai siva.

Fri Jun 20, 01:28:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

உங்கள் தகவலுக்கு நன்றி புதுவை சிவா.

Fri Jun 20, 04:36:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க